ECONOMYMEDIA STATEMENTNATIONAL

 ஃபிட் மலேசியா சிலாங்கூர் திட்டத்தை மந்திரி புசார் தொடங்கி வைத்தார்

கோல லங்காட், செப் 2-  உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய  ஃபிட் மலேசியா சிலாங்கூர் 2023  திட்டத்தை  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று காலை இங்குள்ள கமூடா கோவ் சென்ட்ரல் பார்க்கில் தொடக்கி வைத்தார்.

இந்த ஃபிட் மலேசியா சிலாங்கூர் 2023 திட்டம்  பொழுதுபோக்கு நடை, ஐந்து கிலோ மீட்டர் ஓட்டம், டிரெயில் சவாரி, ஏரோபிக்ஸ், கயிறு தாண்டுதல்  மற்றும் போட்டிகள் வடிவிலான 14 உடற்பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளை  உள்ளடக்கியுள்ளது.

இந்த நிகழ்வையொட்டி உடற்பயிற்சி  மற்றும் ஆரோக்கியம் என்ற கருப்பொருளுடன் கூடிய கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

இந்நிகழ்வில் தொடக்க உரை ஆற்றிய அமிருடின்,  இது போன்ற திட்டங்கள் மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஊட்டுவது டன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் வளர்க்கும் என்றார்.

ஆரோக்கியமான மற்றும் வலுவான சமூகங்களை உருவாக்குவதில் இது போன்ற திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நவீன தொழில்நுட்பத்தின் நடப்புச் சூழலில் உபகரணங்களின்  பரவலான பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமானது. ஏனெனில் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நமது உயிரியல் அமைப்புக்கு   இயக்கம்  தொடர்ந்து தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.


Pengarang :