ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜெராம்  தாமான்  செத்தியா பூடியில்  தேசியத் தின கொண்டாட்டம் இந்தியர் சமூக பொது நல ஒருங்கிணைப்பு சங்கம் ஏற்பாட்டில் 

ஜெராம், செப்டம் 1 ;-  நாட்டின்  66 – வது தேசியத் தினத்தை  ஜெராம் இந்தியர் சமூகம் பொது நல ஒருங்கிணைப்பு சங்கம்  தாமான்  செத்தியா பூடியில்  விளையாட்டு போட்டிகளுடன் மிகச் சிறப்பாக  ஏற்படு செய்திருந்தது.

அதில் சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டுதல், பலூன் ஊதுதல், பந்தை விடாமல் அடித்தல், மற்றும்  பெரியவர்களுக்கான கயிறு இழுத்தல், சட்டி உடைத்தல், இசை நாற்காலி போன்ற விளையாட்டு போட்டிகள்  வயதுக்கு  ஏற்ப  நடத்தப்பட்டன.

இந்தத் தேசியத் தின விளையாட்டு போட்டிக்கு சிறப்பு வருகை புரிந்த கோல சிலாங்கூர் அம்னோ தலைவர்,  அண்மையில் ஜெராம் தொகுதியில் போட்டியிட்ட வருமான  ஹஜி யாஹ்யா இப்ராஹிம் பேசுகையில்  ஒவ்வொரு ஆண்டும் தேசியத் தினத்தன்று ஜெராம் தொகுதியில் இதுபோன்ற சிறப்பான விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்தி வரும் நிகழ்வின் தலைவருமான திரு அருள் மாறனுக்கும் அவர் தம் குழுவினருக்கும்  தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார்.

அதே சமயம் மூவினத்தையும் ஒன்று படுத்தும் நமது  தேசியத் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் இந்த நிகழ்வு அனைவரின் ஒற்றுமை  உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அதோடு இங்கு நிறைய பேர் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனவே இந்தத் தருணம் உண்மையில் தன்னை  மகிழ்ச்சியில்  ஆழ்த்தி உள்ளது.  இந்த வேளை மக்களின் ஒற்றுமையின் உன்னதத்தை  நமக்கு  உணர்த்துவதாக  கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்  ஹஜி யாஹாய இப்ராஹிம்.

இந்த நிகழ்வின் தலைவரும், ஜெராம் சமூக பொது நல ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவருமான திரு அருள் மாறன் அவர் உரையில் அங்கு வருகை அளித்த அனைவரையும்  வரவேற்று நன்றி  கூறினார்.  அன்றைய நிகழ்வுக்கு  தான் எதிர்பார்த்ததை விட அதிகமானவர்கள் வந்தது ஏற்பாட்டாளர்களுக்கு  பெருமையாக உள்ளதாக கூறினார்.  இந்நிகழ்வில்  நம்மிடையே உள்ள ஒற்றுமை , நெருக்கம்  என்றும் நிலைக்க வேண்டும் என கூறி  தனது பேச்சை முடித்தார் திரு அருள் மாறன்.

அந் நிகழ்விற்கு  வந்திருந்த  கோல சிலாங்கூர் பி.கே.ஆர் .தொகுதியின் தலைவர் திரு.தீபன்,  இதன்  ஏற்பாட்டாளர்கள் அனைவரும் மலேசிய சின்னத்துடன்  கொண்ட டீ சட்டை அணிந்திருப்பது மிக கவர்ச்சியாக  உள்ளதாகவும். இது போன்ற  நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துவது மிக  சிரமமான செயல் என்றார்.

இவ்வாண்டு  மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு பல விளையாட்டு போட்டிகளுக்கு  ஏற்பாடுகளைச் செய்த  குழுவினரை பாராட்டினார்.

அன்று நம் ஒற்றுமைக்கு   பெற்ற  பரிசுதான் சுதந்திரம்,  நாட்டு மக்கள்  ஒற்றுமையாக தொடர்ந்து வாழ்ந்து வந்தால்  மேலும் பல சிறப்புகளை அடையலாம் என்றார்.

இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் நம்மிடையே அதிக எதிர்பார்ப்புகள் உண்டு. ஆனால்,  இந் நாட்டின் வருங்கால  சந்ததி  ஒற்றுமையாக  வாழ வேண்டும்  என இன்றைய  அரசாங்கம் பாடுபடுகிறது.

இதுப் போன்ற நிகழ்வுகள்  நம்மிடையே ஒற்றுமை மேலோங்க உதவுகிறது, அரசாங்கத்தின் நோக்கமும் ஈடேருகிறது  என்றும் அவர்  கூறி இ்ந்த வேலையில் அனைவருக்கும் சுதந்திரத் தின வாழ்த்துக்கள் என்று கூறி விடைபெற்றார்.

இறுதியாக  சங்கத்தின் தலைவர் திரு அருள்மாறன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறி, மதியம் சுமார் 3:00 மணியளவில் நிகழ்வை நிறைவு செய்தார்.


Pengarang :