ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆறு குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் பரிட் ஜாவாவில் அடக்கம்

மூவார், செப்டம்பர் 2 – நேற்று மதியம் சிகாமாட்டில் உள்ள தாமன் யயாசன் அருகே ஜாலான் சிகாமாட்-குவாந்தானில் நடந்த விபத்தில் உயிரிழந்த 6 குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் பாரிட் ஜாவாவில் உள்ள உபுதியா இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

அமீருதீன் இஸ்மாயில், 46, அவரது மனைவி நோரஹிமா நூர் முகமது, 43, மற்றும் இவர்களது நான்கு குழந்தைகளான பாத்திமத்துல்சாஹ்ரா, 17; செரி கதீஜா அகிலா, 13; மற்றும் 10 வயதான ருஃபைததுல் அஸ்யாரியாஹ் மற்றும் ஐந்து வயது  முஹம்மது அஸ்யக்ராவி ஆகியோர் இன்று மாலை சுமார் 4.50 மணி அளவில் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டனர்.

முன்னதாக, குடும்பத்தின் அஸ்தி   சிகாமாட் மருத்துவமனையில் இருந்து  இறுதிச் சடங்குக்காக கொண்டு வரப்பட்டு,  பிற்பகல் 3 மணியளவில் உபுதியா மசூதியை வந்தடைந்தது, அதே நேரத்தில் குடும்பத்தினர் மற்றும் தெரிந்தவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறந்தவரின் மூத்த மகன் அப்துர்ரஹ்மான், 19, 500 க்கும் மேற்பட்டவர்கள் உடன் இறுதி பிரார்த்தனையை நடத்தினார்.

முன்னதாக, நேற்று மாலை 6.37 மணியளவில் நடந்த விபத்தில், உயிரிழந்தவர்களை ஏற்றிச் சென்ற  பெரோடுவா அல்சா கார், டிரெய்லர்  லாரி,  ஹோண்டா எச்ஆர்வி, புரோட்டான் வீரா, பெரோடுவா பெஸ்ஸா, பெரோடுவா அல்சா ஆகிய ஐந்து வாகனங்கள் சிக்கின.

பாதிக்கப்பட்ட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், அதே நேரத்தில் இளைய குடும்ப உறுப்பினர் முஹம்மது அஸ்யக்ராவி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்தில் அமீர் ருதீனின் மற்றொரு மகன் அப்துல்லா (15) பலத்த காயம் அடைந்து சிகாமட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மணல் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்ததை அடுத்து இந்த அசம்பாவிதம்  நடந்ததாக  தெரிய வந்துள்ளது.

சாலை சீரமைப்பு பணியின் காரணமாக ஹோண்டா HRV  வேகத்தை குறைத்ததால், அதே திசையில் சென்ற லாரி சரியான நேரத்தில் நிற்கத் தவறி சறுக்கிய   லாரி எதிர் பாதையில் நுழைந்ததால், எதிர் திசையில்  சென்ற  பேரோடுவா அல்சா மீது மோதியது. ஏழு பேர் கொண்ட  குடும்பத்தை  ஏற்றிச் சென்ற பேரோடுவா அல்சா கடுமையான  சேதமடைந்தது.


Pengarang :