ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து சமூகத்திற்கு சேவையாற்றுங்கள்- பட்டதாரிகளுக்கு யுனிசெல் வேந்தர் வேண்டுகோள்

கோல சிலாங்கூர், செப் 10 – பல்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு
சிறந்த கல்வியை வழங்குவதில் இனம், கலாச்சாரம் மற்றும் மத ஒற்றுமையை
சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) வலியுறுத்துகிறது என்று அதன் வேந்தர் ராஜா
டான் ஸ்ரீ அர்ஷாட் அல்ஹாஜ் ராஜா துன் உடா அல்ஹாஜ் கூறினார்.

ஒருவரோடு ஓருவர் தொடர்பு கொள்ளும் எல்லா நேரங்களிலும் ஒற்றுமை உணர்வு
நிலைநாட்டப்பட வேண்டும். அப்போதுதான் இணக்கமான சமுதாயத்தை உருவாக்க
முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மண்டபம் மலாய், சீன, இந்திய மற்றும் சபா மற்றும் சரவாக்கின் பழங்குடி
சமூகங்களைச் சேர்ந்த பட்டதாரிகளால் நிரம்பி இருப்பதை கண்டு நான் மிகவும்
மகிழ்ச்சியடைகிறேன். இந்தோனேசியா, ஓமன், பங்களாதேஷ், பாகிஸ்தான்,
சோமாலியா, சீனா மற்றும் கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களும்
இங்கு உள்ளனர்.

யுனிசெல் பட்டதாரிகள் மற்றும் எதிர்கால முன்னாள் மாணவர்கள் என்ற முறையில்,
நீங்கள் நல்லிணக்கத்தின் தூதர்களாக மாற வேண்டும். பல்கலைக்கழகத்திற்கும்
சிலாங்கூருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர் யுனிசெல் பல்கலைக் கழகத்தின்17வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது கூறினார்.

பட்டதாரிகள் பழைய மாணவர் அமைப்பின்  உறுப்பினர்களாக ஆக வேண்டும் என
வலியுறுத்தியவர், இதன் மூலம்  மாணவர்களுக்கு வழிகாட்டி, கல்வி மேம்பாடு,
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க துறைகளில்  பங்களிக்க முடியும் என்றார்.

யுனிசெலை சிறந்த அறிவார்ந்த இடமாக  ஆக்குங்கள். இது உங்களுக்கு நன்றாக
பணி செய்தது. இப்போது உள்ள 40,000-க்கும்  அதிகமான சக முன்னாள் மாணவர்களுடன்
உங்கள் பிணைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துங்கள் என்று அவர்  கூறினார்.


Pengarang :