ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மூன்று மாநிலங்களில் வெள்ளம்- 299 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் 

கோலாலம்பூர், செப் 24- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள நான்கு துயர் துடைப்பு மையங்களில் இன்று காலை 9.00 மணி நிலவரப்படி 229 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பேராக் மாநிலத்தில் நேற்றிரவு 35 பேராக இருந்த வெள்ள அகதிகளின் எண்ணிக்கை இன்று காலை 38 பேராக அதிகரித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகக் குழுவின் செயலகம் கூறியது. எட்டு குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் கிரியான் மாவட்டத்தின் சாங்காட் லோபாக் தேசிய ஆரம்பப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

சபா மாநிலத்தின் பியூஃபோர்ட்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 குடும்பங்களைச் சேர்ந்த 228 பேராக உள்ளது. இவர்கள் செலாங்கூன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பியூஃபோர்ட் மாவட்டத்தில் கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர் என சபா பேரிடர் மேலாண்மை செயல்குழு அறிக்கை ஒன்றில் கூறியது.

சரவா மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் லிம்பாங்கில் உள்ள இரு வெள்ள நிவாரண மையங்களில் தங்கியியுள்ளனர்.


Pengarang :