ECONOMYMEDIA STATEMENT

கோலக் கிள்ளானில் கடல் பெருக்கு அபாயம்- பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்து

ஷா ஆலம், செப் 28- நாளை தொடங்கி வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொது மக்கள் குறிப்பாக கோலக் கிள்ளான் வட்டார குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அக்காலக்கட்டத்தில் கடலில் நீர் மட்டம் 5.7 ஏழு மீட்டர் வரை உயரும் சாத்தியம் உள்ளதால் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலகம் கூறியது.

நாளை அதிகாலை 5.52 மணி தொடங்கி கடலின் நீர் மட்டம் 5.5 மீட்டராக இருக்கும் என்று அந்த அலுவலகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட விளக்கப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 6.31 மணி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.07 மணிக்கு கடல் நீர் மட்டம் 5.7 மீட்டராகவும் திங்கள்கிழமை காலை 7.38 மணிக்கு 5.6 மீட்டராகவும் இருக்கும்.

வரும் செப்டம்பர் 29 முதல் அக்டோபர்  2 வரை  கோலக் கிள்ளான் நிலையத்தில் இந்த கடல் பெருக்கு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, நடப்பு நிலவரங்களைக் கருத்தில் கொண்டு கிள்ளான் வட்டார மக்கள் மிகுந்த விழிப்பு நிலையில் இருக்குமாறு கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழு கேட்டுக் கொண்டுள்ளது.


Pengarang :