ECONOMYMEDIA STATEMENT

மித்ரா நிதி சமுதாயத்திற்கு சென்று சேர பாடுப்படும் டத்தோ ஸ்ரீ அன்வார், டத்தோ ரமணனுக்கு நன்றியும், பாராட்டுகளும்.

செய்தி, சு.சுப்பையா

செமிஞ்சே.அக்.15- மித்ராவின் நிதிகள் இந்தியச் சமுதாய மேம்பாட்டுக்கு நாட்டில் உள்ள 72 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு  ஒதுக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரி.ம 100,000.00 ஒதுக்கப்பட்டுள்ளன. உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் கீழ் ரி.ம. 100,000.00 ஒதுக்கப் பட்டுள்ளது.

இந்நிதியை ஒதுக்கிய  மித்ராவின் தலைவர் டத்தோ ரமணனுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியான இராசன் முனுசாமி தெரிவித்தார்.
மித்ராவின் நிதியை பகிர்ந்தளிக்கும்  குழுவில்  லஞ்ச ஒழிப்பு அதிகாரியும் இடம் பெற்றுள்ளதுடன்,  நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட  குழு வழி நடத்துகிறது.

நிதி ஒதுக்கீடுகள் பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகு தான் வழங்கப்படுகிறது. இந்நிதி இந்தியச் சமுதாயத்தின் மேம்பாட்டிற்க்கு செலவிடப்படும். உலு லங்காட் தொகுதியின்  கீழ் 8 திட்டங்கள் முறையாகச் சமர்ப்பிக்கப் பட்டது. அதன் பிறகு நிதி ஒதுக்க பட்டது என்று இராசன் மேலும் கூறினார்.

முதல் திட்டமாக இந்தியச் சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டுக்காக தொகுதியில் உள்ள 3 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செலவிடப்பட்டது.  இன்று நடைபெறும் மலர் மாலை கட்டும் நிகழ்வும் மித்ரா நிதியின் கீழ்த் தான் நடைபெறுகிறது.

30 இந்திய மாதர்கள் இத்திட்டத்தின் கீழ்ப் பயிற்சி பெறுகின்றனர். எதிர்காலத்தில்  இதன் வழி ஒவ்வொருவரும்   உபரி வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படும். ஒரு சிலர் பகுதி நேர வியாபாரமாக வீட்டிலிருந்து மலர் மாலைக் கட்டும் தொழிலில் ஈடுபடுவார்கள். பூக்கடை வைத்து முழு நேர வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்குக் குடை, மேசை, நாற்காலிக்கு ஏற்பாடு செய்ய காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் இராமசந்திரன் மற்றும் சந்திரன்   பொறுப்பேற்றுள்ளனர் , அவர்கள் அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வார்கள். இந்த மலர் மாலைக் கட்டும் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும்  என்று இராசன் தெரிவித்தார்.

இதே போல் இம்மாத இறுதியில் வீடியோ பயிற்சி மற்றும் ட்ரோன் பயிற்சியும் நடை பெறுகிறது. இப்படிப்பட்ட பயிற்சிகளில் இந்தியச் சமுதாய இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இந்தியச் சமுதாய வறுமையைத் துடைதொழிப்பதில் அரசு முழுக் கவனம் செலுத்துகிறது. மேலும் இந்தியச் சமுதாயத்தின் வருமானத்தை அதிகரிக்க திட்டங்கள் கொண்டு வருகிறது.  அரசின் நல்ல திட்டங்களை இந்தியச் சமுதாயம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்திட்டங்கள் உலு லங்காட் தொகுதியில் முறையாக நடைபெறக் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் இராமசந்திரன், சந்திரன், இந்தியச் சமுதாயத் தலைவர் நடேசன், திருமதி திலகா ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்


Pengarang :