ECONOMYMEDIA STATEMENT

வசதியற்ற மாணவர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டம்

கோம்பாக், அக் 20: சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ, வசதியற்ற மாணவர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவதன் மூலம் மாதவிடாய் பிரச்சனையைச் சமாளிக்கும் திட்டத்திற்காக RM100,000 செலவிட்டது.

ஐந்து பள்ளிகள் ஒரு வருடத்திற்கான விற்பனை இயந்திரங்கள் மற்றும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாகப் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் (CSR) தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மாநில பட்ஜெட்டில் டத்தோ மந்திரி புசார் அறிவித்த 200,000 ரிங்கிட்களில் இருந்து 100,000 ரிங்கிட் முதல் கட்ட முன்னோடித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது என்று அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர் விளக்கினார்.

“நாங்கள் ஐந்து பள்ளிகளுடன் தொடங்குகிறோம், அது நன்றாக நடந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் மற்ற பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்,” என்று கூறினார்.

சானிட்டரி நாப்கின்களை வாங்க முடியாமல் வறுமையில் வாடும் மாணவர்களுக்குச் உதவும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது என தலைவர் ஜுவைரியா சுல்கிப்லி தெரிவித்தார்.

“இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் டத்தோ மந்திரி புசாரின் அக்கறையை நான் பாராட்டுகிறேன். அடுத்த ஆண்டு இத்திட்டம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப் படும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.


Pengarang :