ECONOMYMEDIA STATEMENT

வெளிநாட்டில் வளர்ச்சியடைய வாய்ப்புள்ள உள்ளூர் சிறு தொழில்முனைவோரின் தயாரிப்புகளை கண்டறிய எண்ணம் – மாநில அரசு

கோலாலம்பூர், அக் 20: வெளிநாட்டில் வளர்ச்சியடைய வாய்ப்புள்ள உள்ளூர் சிறு தொழில்முனைவோரின் தயாரிப்புகளை மாநில அரசு கண்டறிந்து வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாடு (SIBS) 2023, தயாரிப்புகளை உயர் மட்டத்திற்கு முன்னிலைப்படுத்த தொழில்முனைவோருக்கு ஒரு வாய்ப்பாகும் என ஹலால் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஃபஹ்மி கூறினார். 

“சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாட்டில் திறமையான தொழில்முனைவோரைக் கண்டறிந்து, அவர்களின் தயாரிப்புகளை உயர் மட்டத்திற்கு மேம்படுத்த உதவ விரும்புகிறோம். உதாரணமாகச் சுவாரஸ்யமான தயாரிப்புகளை வைத்திருக்கும் அஸ்னாஃப் வர்த்தகர்கள் உள்ளனர், அவர்களிடம் ஹலால் சான்றிதழ் இல்லாவிட்டாலும், நாங்கள் உதவுவோம்.

“நாங்கள் 10 முதல் 20 தொழில்முனைவோரைத் தேர்ந்தெடுத்து அடுத்த ஆண்டு சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாடு (செல்ஹாக்), பினாங்கு ஹலால் மாநாடு அல்லது மலேசிய சர்வதேச ஹலால் கண்காட்சி (மிஹாஸ்) போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வோம்,” என்று அவர் கூறினார்.

2015 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிப்பதோடு, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய துறைகளை ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகளைத் திறந்து வைத்துள்ளது.

 


Pengarang :