MEDIA STATEMENTSELANGORYB ACTIVITIES

முறுக்கு சுட்டு  பகிர்ந்தளித்தார் புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர்

செய்தி . சு.சுப்பையா

சுங்கை  பூலோ அக். 28- புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங், இந்திய சமுதாயத் தலைவர் லோகநாதன் உதவியுடன்   தீபாவளியை  முன்னிட்டு முறுக்கு சுட்டும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இந்த சிறப்பு நிகழ்வு டேசா ஆமான் , சுங்கை பூலோ பொது மண்டபத்தில் சிறப்பாக நடந்தது.

காலை 10.00 மணிக்கு முறுக்கு சுடும் நிகழ்வு தொடங்கியது. புக்கிட் லஞ்சான் சட்ட மன்ற தொகுதியில் உள்ள 30 இந்திய தாய்மார்கள் இதில்  கலந்து சிறப்பித்தனர். அவர்களோடு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங், இந்திய சமுதாயத் தலைவர் லோகநாதன், சட்ட மன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

கொட்டும் மழையிலும் முறுக்கு சுடும் நிகழ்வை அனைவரும் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.  காலையிலிருந்து   இந்த சிறப்பு நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட அனைவருக்கும்  சிறப்பு சான்றிதழும் முறுக்கும் வழங்கி சிறப்பித்தார் சட்டமன்ற உறுப்பினர்.

நாளை முதல் தொகுதியில் உள்ள B 40 பிரிவை சேர்ந்த இந்தியர்களை சந்தித்து முறுக்கு டப்பாக்கள்  முறையாக விநியோகிக்கப்படும் என்ற அவர்,  அதே போல் புக்கிட் லஞ்சான் சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பும் எதிர்வரும் 19.11.2023 அன்று டமன்சாரா டாமாய் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இந்திய பாரம்பரிய உணவுகளுடன் கலை நிகழ்ச்சியும், அதிர்ஷ்ட குலுக்கும் நடத்தவுள்ளதாக  சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசு கொண்டு வரும் மாதர்களுக்கான பிரத்தியேக நிகழ்வுகளில் இந்திய குடும்ப மாதர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  எதிர் வரும் 1.11.2023 காலை 10.00 மணி முதல் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேலை செய்யும் குடும்ப மாதர்களுக்கு ரி.ம. 1,000.00 உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு இணையத்தின் வாயிலாக மனு செய்யுங்கள்.மூன்று சிறு குழந்தைகளுக்கு மேல் கொண்ட குடும்ப மாதர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களின் குடும்ப வருமானம் மாதத்திற்கு ரி.ம. 8,000.00 திற்கும் குறைவாக இருத்தல் அவசியம்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்  புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங்


Pengarang :