ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எம்பி 5,000  வருகையாளர்களுடன் மாநில அளவிலான தீபாவளியைக் கொண்டாடினார்

கிள்ளான், நவ 4: இன்று இரவு இங்குள்ள டத்தாரான் கிள்ளான்@படாங் செட்டி வாகன நிறுத்துமிடத்தில் மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டத்தில் கிட்டத்தட்ட 5,000 குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஏற்பாட்டுக் குழு தலைவரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, மாநில சபாநாயகர் லவ் வெங் சான், கிள்ளான் நாடாளுமன்ற  உறுப்பினர் வீ,கணபதிராவ் மற்றும் சிலாங்கூர் மாநில சட்ட ஆலோசகர் டத்தோ சலீம் சோயிப்@ஹமீட் ஆகியோருடன் மேலும் பல  ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை உற்சாகப்படுத்தினர்

 

 

டத்தோ  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி (நடுவில்) 4 நவம்பர் 2023 அன்று, டத்தாரான் கிள்ளான்@படாங் செட்டி, கிள்ளாங்கில் நடந்த சிலாங்கூர் 2023 தீபாவளி கொண்டாட்ட விழாவில்  இவ்வாண்டில் நான்காம் கட்ட  மானிய ஒதுக்கீட்டை 53 கோயில்களுக்கு வெள்ளி 515,000  காசோலைகளை வழங்கினார்.

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பெம்பஸ்மியன் கெமிஸ்மியன், வீ பாப்பராய்டு  சுகாதார எஸ்கோ ஜமாலியா ஜமாலுதீன்; ஒற்றுமை துறை எஸ்கோ டத்தோ ரிஜாம் இஸ்மாயில் மற்றும் டாக்டர் ஃபஹ்மி  ஆகியோர் உடனிருந்தனர்.

அமிருடின் தனது உரையில், தீபாவளி கொண்டாட்டம் என்பது சவாலான சூழலில் குடும்பத்தில் சகோதரத்துவத்தையும் மனித நேயத்தையும் ஒன்றிணைக்கும் கொண்டாட்டமாகும்.

“இந்த தீபாவளியை  மக்கள் ஒன்றுபட்டு  எதிர்காலத்திய சவால்களை முறியடிப்பதற்கான முக்கியமான யந்திரமாக கொள்வோம், மகாபாரதம் போன்ற இந்து இதிகாசங்களில்  காணப்படும்  போராட்டங்களை மேற்கோள் காட்டி  ஊக்கமூட்டினார்..

“சிலாங்கூரை  மலேசியாவில் சிறந்த மாநிலமாக மாற்ற  மக்கள் மனது  வைக்க வேண்டும் அதற்கான அடிப்படைகள் மாநில அரசு செய்து வருவதாக கூறினார்.  ஆக, ஆசியானில் சிறந்த மாநிலமாக அதை உருவாக்குவதே தனது லட்சியம்,” என்றார்.

முன்னதாக, விழாவில்,  உயர்கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கை கட்டணத்தின் பங்களிப்புக்கான காசோலைகளை அமிருடின் 104 ஏழை  B40 குடும்பங்களை சேர்ந்த  இந்திய மாணவர்களுக்கு  RM590,016.75 வழங்கினார்.


Pengarang :