ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் மாநில தீபாவளி கொண்டாட்டம் கோலாகலமாக  நடைபெற்றது.

செய்தி . சு. சுப்பையா
கிள்ளான். நவ.4-  சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டம்  சிறப்பாக நடைபெற்றது. ஆடல், பாடலுடன் கூடிய விருந்து உபசரிப்புடன் பல்லின மக்கள் சூல கோலாகலமாக நேற்று கிள்ளானில் தொடங்கியது.

இந்த தீபாவளி கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி  சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.

சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயிடு தலைமையில் இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சிலாங்கூர் மாநிலத்தின் பெரும்பான்மையான  ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய சமுதாய தலைவர்கள் மற்றும் பல ஆயிரம்  பல்லின மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலை நிகழ்ச்சியுடன் இந்த தீபாவளி நிகழ்ச்சி தொடங்கியது. அதன் பின்னர் தீபாவளி விருந்து உபசரிப்பும் தொடங்கியது.

நிகழ்ச்சியில் தொடக்க உரை நிகழ்த்திய  கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ்  கடந்த 10 ஆண்டுகளாக சிலாங்கூர் இந்தியர்கள் மேம்பாட்டுக்காக கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தொடர்ந்து புதிய சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் தொடர்ந்து மேற்கொள்வார்  என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

ஆலயங்களுக்கு உதவி நிதி, தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி நிதி, வசதி குறைந்த தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு வருடாந்திர போக்குவரத்து கட்டணம், மைசெல் அடையாள பத்திர விவகார பிரிவு, ஐ சீட் இந்தியர் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு பிரிவு,  வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கான  உயர் கல்வி பட்டதாரிகள் உதவி நிதி போன்ற அனைத்து திட்டங்களும் இந்திய சமுதாய மேம்பாட்டை உறுதி செய்ய தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து இந் நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய சிலாங்கூர் மாநில இந்திய ஆட்சிக் குழு உறுப்பினராகிய பாட்டராயிடுவும் இந்திய சமுதாய மேம்பாட்டுக்காக நடை பெற்ற அனைத்து திட்டங்களும் தொடர்ந்து மேற்கொள்ளப் படும். இந்திய சமுதாயத்தின் மேம்பாடே முக்கியம் எனக் கூறினார்.கடந்த 10 ஆண்டுகளாக கணபதிராவ் மேற்கொண்ட அனைத்து திட்டங்களையும் மேலும் சிறப்பாக மேற்கொள்ளப் படுவதை தாம் உறுதி செய்வதாக கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். இந்த திறந்த இல்ல தீபாவளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் இந்திய பாரம்பரிய உணவு வகைகள்  வழங்கி உபசரிக்கப் பட்டனர்.


Pengarang :