ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

 கனமழை திங்கள் வரை திராங்கானு, கிளந்தனைத் அடுத்த 2 நாட்களுக்கு தாக்கும்

கோலாலம்பூர், நவ.18: திராங்கானு மற்றும் கிளந்தான் பகுதிகளில் இந்த திங்கட்கிழமை (நவம்பர் 20) வரை தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று முதல் திராங்கானு மற்றும் கிளந்தனில் உள்ள தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தனாஹ் மேரா, பாச்சோக், மச்சோங், பாசிர் பூத்தே மற்றும் குவாலா கிராய் ஆகிய பல பகுதிகளிலும் இந்த நிலைமை ஏற்படும் என்று மெட்மலேசியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

6 மணி நேரத்திற்குள் 60 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்றும், தொடர்ந்து கனமழை பெய்யும் என்று அறிகுறிகள் தென்படும் போது, தொடர் மழை எச்சரிக்கை (மோசமான அளவு) வெளியிடப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலக் கட்டத்தில் கிளந்தான், கெடா, பேராக், பகாங் மற்றும் சபாவில் பல பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்தில் தொடர் மழை எதிர் பார்க்கப் படுவதாக மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

கிளந்தான்  குவா மூசாங், கெடாவில் லங்காவி, குபாங் பாசு, கோத்தாஸ்ட்டார், போகோக் சேனா, படாங் தெராப், யான், பெண்டாங், கோலா மூடா, சிக் மற்றும் பாலிங் ஆகியவை அடங்கும்.

இதே நிலை பேராக்கிலும் (உலு பேராக் மற்றும் கோலா கங்சார்) ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது; பகாங் (ஜெரண்டுட், மாரன், குவாந்தன், பெக்கன் மற்றும் ரொம்பின்); மற்றும் சபா (ரனாவ், கோத்தா பெர்ரலுட், டெல்பிட், கினாபாத்தங்கன், பெலூரன், சண்டகான் மற்றும் கூடாட்  அகிய இடங்களில் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது


Pengarang :