ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கியவர்களை மியன்மாரிலிருந்து மீட்க அரசு நடவடிக்கை

பெய்ஜிங், நவ 19- மியன்மார் நாட்டில் வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலின் வலையில் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தும் என்று துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முகமது அலாமின் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி ஆக்ககரமான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய தமது தரப்பு பல்வேறு தொடர் முன்னெடுப்புகள் அமல்படுத்தும் என்று அவர் சொன்னார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ படிலா யூசுப் சீன நாட்டிற்கு மேற்கொண்ட பயணத்தின்  போது பல விவகாரங்களில் இணக்கம் காணப்பட்டது குறித்து விஸ்மா புத்ரா மகிழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

மியன்மார் விவகாரத்தைப் பொறுத்த வரை சீனவுடனான அணுக்கமான உறவு காரணமாக சாதகமான பயன்கள் கிடைத்துள்ளன என்று பாடிலாவின் சீனப் பயணத்தின் இறுதியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெவித்தார்.

மியன்மாரில் வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலின் பிடியில் சிக்கியுள்ள மலேசியர்களை மீட்பதில் உதவுவதாக சீன வாக்குறுதியளித்துள்ளது என்று பாடிலா முன்னதாக கூறியிருந்தார்.

இத்தகைய மோசடிக் கும்பலின் பிடியில் சிக்கியவர்களிடம் கடப்பிதழ்கள் இல்லாத காரணத்தால் அவர்களால் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே, அவர்களை மீட்பதற்கு கிடைக்கின்ற அனைத்து வழிமுறைகளையும் நாம் பயன்படுத்தி வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :