ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

பேராக்கில் உள்ள மூன்று வெள்ள நிவாரண மையங்களில் 23 பேர் அடைக்கலம்

ஈப்போ, நவ 19- வெள்ளம் காரணமாக இன்று காலை  கிந்தா மற்றும் கிரியான் மாவட்டங்களைச் சேர்ந்த 23 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் மூன்று துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை 24 குடும்பங்களைச் சேர்ந்த 84 பேராக இருந்தது.

கிந்தா மாவட்டத்தின் தாமான் மேரு ஏ2 சமூக மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையத்தில் தற்போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எண்மர் இன்னும் அடைக்கம் நாடியுள்தாக பேராக் மாநில பேரிடர் மேலாண்மை  செயல்குழு  செயலகம் கூறியது.

கிரியான் மாவட்டத்தின் சங்காட் லோபாக் தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் இன்னும் தங்கியுள்ள வேளையில் ஆலோர் பொங்சு தேசிய பள்ளியில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் அடைக்கலம் புகுந்துள்ளதாக அச்செயலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்காட் ஜோங்கில் உள்ள பீடோர் ஆற்றில் நீர் மட்டம் 3.15 மீட்டரைத் தொட்டு எச்சரிக்கை அளவில் உள்ளதாக வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை தெரிவித்தது.

பேராக் மாநிலத்தின் 12 மாவட்டங்களிலும் இன்று மாலை மற்றும் இரவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.


Pengarang :