ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசு மக்கள் காப்புறுதி  திட்டத்தை அவ்வப்போது ஆய்வு செய்யும்.

ஷா ஆலம், நவ. 24: மாநில அரசு ஒரு சேவையை பல  உதவி திட்டங்கள் மூலம் வழங்குவதை தவிர்க்க,  சில திட்டங்களை ஆய்வு செய்யும். மக்களுக்கு காப்புறுதி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் ஒரே மாதிரியான பலனை எந்த திட்டமும்  வழங்குவது தெரிய வந்தால்  அதனை மறு ஆய்வு செய்யும்  என்று டத்தோ மந்திரி  புசார் கூறினார்.

இல்திசம் சிலாங்கூர் சிஹாத் திட்டம் (ISS) மற்றும் சிலாங்கூர் பொது காப்பீடு திட்டம் (INSAN) ஆகியவை மறுமதிப்பீடு செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“ஐ.எஸ்.எஸ் ஏற்கனவே மருத்துவமனையில் சேர்வதற்கான ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது, மேலும் ‘ஓவர் லேப்பிங்’ இல்லை என்பதற்காக முழு பாதுகாப்புத் திட்டத்தையும் மதிப்பாய்வு செய்து வருகிறது.

ஏனென்றால், ஐ.எஸ்.எஸ் RM5,000 இறப்பு காப்பீட்டை வழங்கும் வேளையில், சிலாங்கூர் பொது காப்பீடு திட்டம் RM 10,000 வழங்குகிறது.

இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தீவிர நோய் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கும் திட்டம் குறித்து  பண்டார் பாரு கிள்ளான் பிரதிநிதி டாக்டர் குவா பெங் பீயின்  கேள்விக்கு பதிலளிக்கும் போதே  இவ்வாறு கூறினார்.

அமிருடின் கூற்றுப்படி, மாநில அரசு நிறுவனமான சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ மூலம் செயல்படுத்தப்படும், சிலாங்கூர் பொதுக் காப்பீட்டுத் திட்டமான இன்சான் திட்டத்திற்கு RM21 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது.

“மொத்தம் RM12 மில்லியன் வழக்கமான இன்சான் திட்டதிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் RM9 மில்லியன் தக்காஃபுலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களை, சிலாங்கூர் முஃப்தி அலுவலகம் பரிந்துரைத்த படி நாங்கள் தக்காஃபுலுக்கு மாறியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இந்த  மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு விபத்துக்களால் காயம் அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்க இன்சான் உருவாக்கப்பட்டது.

இம்மாநில மக்களுக்கு பயனளிக்கும் இல் திசம் சிலாங்கூர் பென்யா யாங்கின் 40 க்கும் மேற்பட்ட முன்முயற்சிகளில் ஒன்றான இன்சான் இலவசமாக காப்புறுதி திட்டத்தை வழங்கும் ஒரே மாநிலம் சிலாங்கூர் ஆகும்.


Pengarang :