ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியா உள்பட ஆறு நாடுகளுக்கு விசா விலக்களிப்பு- சீனா அறிவிப்பு

பெய்ஜிங், நவ  25- மலேசியா மற்றும் ஐந்து நாடுகளைச் சேர்ந்த சாதாரண அனைத்துலக கடப்பிதழ்  வைத்திருப்பவர்களுக்கு 2023 நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 2024   நவம்பர் 30ஆம் தேதி வரை  ஒருதலைச் சார்பு விசா விலக்களிப்புக் கொள்கையை சீனா அமல்படுத்துகிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இந்த விசா விலக்களிப்பு பொருந்தும் என்று  சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கையை  மேற்கோள் காட்டி  சின்ஹுவா  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த காலகட்டத்தில், சம்பந்தப்பட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த சாதாரண கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் வணிகம், சுற்றுலா, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைப் பார்ப்பது  போன்ற நோக்கங்களுக்காக 15க்கும் குறைவான  நாட்களுக்கு  விசா இல்லாமல் சீனாவுக்குள் நுழைய முடியும்.

இருப்பினும், விசா விலக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத சம்பந்தப்பட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் சீனாவுக்குள் நுழைவதற்கு  இன்னும் விசாவைப் பெற்றாக வேண்டும் என்று அறிக்கை கூறியது.

இந்தக் கொள்கை,  மக்களிடையே பரஸ்பர பரிமாற்றங்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது என அது தெரிவித்தது.


Pengarang :