ECONOMYMEDIA STATEMENTNATIONAL

செரெண்டாவில் முதலை- பொறி வைத்துப் பிடிக்க பெர்ஹிலித்தான் நடவடிக்கை

ஷா ஆலம், டிச 11- உலு சிலாங்கூர் மாவட்டத்தின் செரேண்டாவில் உள்ள தாசேக் கியாம்பாங்கில் முதலை இருப்பதை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா இலாகா (பெர்ஹிலித்தான்) கண்டறிந்துள்ளது.

அந்த முதலையைப் பிடிப்பதற்காக இம்மாதம் தொடங்கி அப்பகுதியில் தமது தரப்பு பொறி வைத்துக் காத்திருப்பதாக மாநில பெர்ஹிலித்தான் இயக்குநர் வான் முகமது அடிப் வான் முகமது யூசுப் கூறினார்.

குடியிருப்புகளுக்கு அருகில் பிரசித்தி பெற்ற மீன்பிடி பகுதியாக விளங்கும் அந்த ஏரியில் முதலை கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் பொது மக்களிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

அப்பகுதியில் தாங்கள் மேகொண்ட சோதனையில் ஐந்து முதல் ஆறு அடி நீளம் கொண்ட முதலை அப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதியும் அந்த முதலையை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் நோக்கிலும் அங்கு பொறி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொது மக்கள் குறிப்பாக மீன் பிடிப்போர் அப்பகுதிக்குச் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். அந்த முதலை பிடிபடும் வரை அங்கு தொடர் கண்காணிப்பு நடவடிக்கையை பெர்ஹிலித்தான் மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.


Pengarang :