Foto Sumber: Mingguan Wanita
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

இந்தியா  வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, சீனா, பாகிஸ்தானிடம் இருந்து  இறக்குமதி செய்ய மலேசியா முடிவு

கோலாலம்பூர், டிசம்பர் 16 – வெளி நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதியை அடுத்த ஆண்டு மார்ச் வரை தடை செய்ய இந்தியா முடிவு செய்ததைத் தொடர்ந்து, சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை அரசாங்கம் பெறுகிறது.

இந்த நடவடிக்கையால் வெங்காயத்தின் சில்லறை விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படாது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.

“நாங்கள் அதை செய்ய தயாராக இருக்கிறோம். வெங்காயத்தின் விலை (சில்லறை விலை) உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தால் (KPDN) விவாதிக்கப்படும், ஆனால் வேறுபாடு அதிகமாக இருக்காது,” என்று அவர் இன்று இங்கு பார்ட்டி அமானா நெகாரா (அமானா) இளைஞர் மாநாட்டைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தியாவிடமிருந்து  36 சதவீத  வெங்காயத்தை  இறக்குமதி செய்யும் மலேசியா முறையே  சீனா மற்றும் தாய்லாந்து இடமிருந்து  20 மற்றும் 7  சதவீதத்தை பெற்று வந்திருக்கிறது.

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி, அதிகரித்து வரும் உள்ளூர் விலைகளைக் கட்டுப்படுத்த, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது.
– பெர்னாமா


Pengarang :