ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மூன்று மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், டிச 26- திரங்கானு, பகாங் மற்றும் ஜோகூரில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரங்கானு மாநிலத்தின் டுங்குன் மற்றும் கெமமான்  ஆகிய பகுதிகளிலும்  பகாங்  மாநிலத்தில்  ஜெராண்டுட், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின்  ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்யும் என அது கூறியது.

மேலும்  ஜோகூர் மாநிலத்தில்   சிகாமட், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய பகுதிகளிலும் இந்நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  தொடர் மழை எச்சரிக்கையை தொடர்ந்து  சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள மாநில/மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுக்களை  தயார் நிலையில் வைக்குமாறு  இன்று வெளியிட்ட பேரிடர் தயார் நிலை அறிக்கையில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்  (நட்மா ) உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ஏற்படக்கூடிய பேரழிவுகளை எதிர்கொள்வதற்கான தயார்நிலையின் அளவை அதிகரிக்கும்படி மாநில/மாவட்ட பேரிடர்  மேலாண்மைச் செயல்குழுக்களை அது கேட்டுக் கொண்டது.

ஒவ்வொரு தற்காலிக துயர் துடைப்பு  மையமும் முழுமையான அடிப்படைத் தேவைகளுடன் இருப்பதையும்  கள கட்டுப்பாட்டுச் சாவடிகள் மோதுமான
மீட்பு உபகரணங்களைக் கொண்டிருப்பதையும் மாநில/மாவட்ட பேரிடர் மேலாண்மைச் செயல்குழுக்கள்  உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Pengarang :