ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பங்சார் அடுக்குமாடி குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், டிச. 30 – குடிநுழைவுத்துறை  இன்று அதிகாலை பங்சார், அப்துல்லா ஹுகுமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குற்றங்களுக்காக 567 வெளி நாட்டினரை கைது செய்துள்ளது.

கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை   இயக்குனர் ஷியாம் சூல் பத்ரின் மொஹ்ஷின் கூறுகையில், அதிகாலை 1.15 மணிக்கு தொடங்கிய மூன்று மணி நேர நடவடிக்கை, ஒரு வார உளவுத்துறை சேகரிப்புக்குப் பிறகு, அப்பகுதியில் வெளி நாட்டவர்களின் வருகை குறித்து குடியிருப்பாளர்களின் புகார்களுக்கு பின்  மேற்கொள்ளப்பட்டது.

” இச் சோதனையின்  போது, 1,000 வெளிநாட்டினர் பரிசோதிக்கப் பட்டனர், மேலும் 252 பங்களாதேஷ், 163  நேபாளிகள், 75 மியான்மர் பிரஜைகள், 72 இந்தோனிசியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் மற்றும் ஒரு இந்திய பிரஜை ஆகியோர் செல்லுபடியாகும் பயண ஆவணங்களை கொண்டிருக்காதது உட்பட பல்வேறு குடியேற்ற குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

“நான்கு மாதங்கள் முதல் 55 வயது வரை உள்ள அனைத்து வெளிநாட்டவர்களும் மேலதிக விசாரணைக்காக புக்கிட் ஜலீல் உள்ள குடிநுழைவுத்துறை  தடுப்பு காவலுக்கு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்று அவர் நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டினர் எட்டு முதல் பத்து நபர்கள் ஒரு யூனிடைப் பகிர்ந்து கொள்ளும் வீடுகளில் வசிப்பது கண்டறியப்பட்டது, மாத வாடகை RM1,000 இல் தொடங்குகிறது.


Pengarang :