ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இரு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

ஷா ஆலம், ஜன 1- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று தொடங்கி இரு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் இந்த ஏஹ்சான் ரஹ்மா திட்டம் வரும் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் நடைபெறும் என்று அக்கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை வரும் 15ஆம் தேதி தொடரும். வாகனங்களை பழுது பார்ப்பதற்கும் பொருள் கையிருப்பை முறைப்படுத்துவதற்கும் சிறிது ஓய்வை எடுக்க விருக்கிறோம். அனைவருக்கும் 2024ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகள் என்று அது தெரிவித்தது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் சமையல் எண்ணெய் 5 கிலோ 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொது விடுமுறை, வெள்ளிக்கிழமை நீங்கலாக மற்ற தினங்களில் இந்த மலிவு விற்பனை மாநிலம் முழுவதும் நடத்தப் படுகிறது. இந்த விற்பனையை விரிவுபடுத்துவதற்காக பி.கே.பி.எஸ். செகி ப்ரேஷ் பேரங்காடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது.


Pengarang :