ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கலைத் துறையை மேம்படுத்த படைப்பாற்றல் பொருளாதாரக் கொள்கையை சிலாங்கூர் அறிமுகப்படுத்தும்

கோலாலம்பூர், பிப் 11- படைப்பாற்றல் பொருளாதாரக் கொள்கையை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இத்துறையில் நீடித்த மற்றும் ஆக்கத்தன்மை கொண்ட தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

டிஜிட்டல் கலைப்படைப்புத் துறையினர் மற்றும இத்துறை சார்ந்த தரப்பினருடன் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்வில் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் அந்தக் கொள்கை வரையப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இந் கொள்கை தொடர்பில் கருத்துகளைப் பெறுவதற்காக நோன்புப் பெருநாளுக்குப் பிறகு நடத்தப்படும் சிலாங்கூர் படைப்பாற்றல் பொருளாதார ஆய்வரங்கின் மூலம் படைப்பாற்றல் தொழில் துறையினர் மற்றும் இதில் தொடர்புடைய தரப்பினரை ஒன்று திரட்டவிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

படைப்பாற்றல் பொருளாதாரத் துறை போதுமான அளவு மதிக்கப்படாததால் அத்துறைக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் வழங்கவிருக்கிறது. இதன் மூலம் படைப்பாற்றல் துறையில் திறமை கொண்டவர்கள் பின்தங்கிவிடாமலிருப்பதை உறுதி செய்ய இயலும் என்று அவர் சொன்னார்.

இங்கு புஞ்சா ஆலமில் உள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 2024 கிராபிக் கலை மற்றும் டிஜிட்டல் மீடியா கண்காட்சியை நேற்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

டிஜிட்டல் கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களின் புத்தாக்க நடவடிக்கைகளை விரிவு படுத்துவதற்கு ஏதுவாக 20 லட்சம் வெள்ளி நிதியில் சிலாங்கூர் கலாசார தொழில் முனைவோர்   மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இம்மாதம் தொடக்கி வைக்கவுள்தாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :