MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் மந்திரி கட்டமைப்பு (MBI) நிறுவனம் மாணவர்களுக்கு கணினி அன்பளிப்பு

செய்தி . சு.சுப்பையா

கோலசிலாங்கூர்.பிப்.23-  இன்று கோல சிலாங்கூர்,புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற  தொகுதியில் உள்ள 5 வசதி குறைந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிலாங்கூர் மந்திரி புசார் நிறுவனம் ( எம்.பி.ஐ. ) மடிக்கணினியை இலவசமாக வழங்கியது. புக்கிட் மெலாவாத்தி சட்ட மன்ற தொகுதியின் சிலாங்கூர் மாநில அரசின் ஒருங்கிணைப்பாளர் துவான் தீபன் சுப்ரமணியம் எடுத்து வழங்கினார்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் கழகம்  வசதி குறைந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வருடந்தோறும் உதவி கரம் நீட்டி வருகிறது. அதன் அடிப்படையில் டிப்ளோமா படிக்கும் 4 மாணவர்களும் அறிவியல் துறையில் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் ஒரு மாணவருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் வசதி குறைந்த மாணவர்களின் உயர் கல்விக்கு உதவ வேண்டும் என்ற சமூக உன்னத நோக்கத்துடன் இச்சேவையை எம்.பி.ஐ. நிறுவனம் செய்து கொண்டு வருகிறது என்று அதன் அதிகாரி துவான் சக்வான் தெரிவித்தார்.

வசதி குறைந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திக்கு எம்.பி.ஐ. தொடர்ந்து உதவிக் கரம் கொடுக்க வேண்டும் என்று தீபன் கேட்டுக் கொண்டார். மேலும் சிலாங்கூர் மாநில அரசு டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வருடந்தோறும் ரி.ம. 1,000.00 வழங்குகிறது. கோல சிலாங்கூரில்  உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் இத் திட்டத்தில் பயனடைய தமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொண்டார்.

இதைத் தவிர ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலை கல்வி படிக்கும் 300 இந்திய மாணவர்களுக்கு வருடந்தோறும் ரி.ம. 100.00 வழங்கப் படுகிறது. எதிர் வரும் மே மாதத்திற்குள் இந்த உதவித் தொகை வேண்டியவர்கள் விரைந்து மனு செய்யும் படி தீபன் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய சமுதாயத் தலைவர் கலைக்குமார், கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் விக்கி மற்றும் கோல சிலாங்கூர் பி.கே.ஆர் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இலவச மடிக்கணினி கொடுக்கும் இந் நிகழ்ச்சி கோல சிலாங்கூர் பி.கே.ஆர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த அலுவலகத்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திறந்து வைக்க உள்ளார்.


Pengarang :