ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2024 மடாணி விழாவிற்கு  இந்தியர்கள் திரண்டு வர வேண்டும்.

செய்தி ; சு.சுப்பையா

கோலசிலாங்கூர். பிப்.24- மடாணி அரசின் ஓர் ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடை பெரும் சிறப்பு விழாவிற்கு கோலசிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள இந்தியர்கள் திரண்டு வர வேண்டும் என்று இவ்விழாவில் கலந்து கொண்ட இந்தியர்கள் கேட்டுக் கொண்டனர்.

மத்திய அரசின் சேவை வேண்டும் என்றால் புத்ரா ஜெயாவிற்குச் செல்ல வேண்டும். ஆனால் இவ்விழாவில் மத்திய அரசின் பெரும்பான்மையான  மக்கள் நலன் சேவைகள் மற்றும் பல  உதவி திட்டங்களுக்கான அலுவலக முகப்பிடச் சேவையை திறந்துள்ளன. இதே போல் சிலாங்கூர் மாநில அரசின் அனைத்து சேவைகளுக்கான முகப்பிடச் சேவை இங்கு வழங்கப் படுகின்றன. இந்த அறிய வாய்ப்பை இந்தியர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுரேந்திரன் பிள்ளை கேட்டுக் கொண்டார்.

செமிஞ்சே வட்டாரத்தில் வசிக்கும் இவர் தற்போது தேசிய பதிவு இலாகாவில் சேவையாற்றுகிறார். தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை இவ்விழாவிற்கு அழைத்து வந்திருந்தார். இவ்விழாவையொட்டி பலரிடம் எடுத்துக் கூறியுள்ளேன். ஆகவே நாளைய நிகழ்வுக்கு அதிகமானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்   என்றார்.

நம்மவர்கள் ஏதும்  கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட்டு விட்டு, எந்தெந்த துறைகளில் என்ன மாதிரியான வாய்ப்புகள் நாட்டில் வழங்கப்படுகிறது  என்பதை அறிந்து கொள்வதுடன், அந்த சேவைகளை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்வது, அதை மற்றவர்களுக்கும், சமுதாயத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வது நலம் இப்படிப் பட்ட நிகழ்வில் கலந்து இந்தியர்கள் பயனடைய வேண்டும்.

இதே போல் சத்தியாதேவி தனது இரண்டு சகோதரிகள் சகவிதா மற்றும் சக்கிலாவுடன் வந்து கலந்து கொண்டார். மூவரும் இ காசே திட்டத்தில் பதிவு செய்து கொண்டோம். இ காசேவின் வழி கலை கைவினை பொருட்கள் தயாரிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டோம் என்கிறார் . நாங்கள் செய்த கைப் பையை எங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டனர். இன்றைய இந்த மடாணி விழாவிற்கு வருகை தந்ததால் இ காசாவில் பதிவு செய்து விட்டோம், மேலும் மூவருக்கும் 3 கைப் பைகள் இலவசமாகக் கிடைத்தன. இப்படிப்பட்ட நல்ல நிகழ்வில் இந்தியர்கள் வந்து கலந்து நன்மை அடைய வேண்டும் என்று சத்தியதேவி கேட்டுக் கொண்டார்.

நாளை இரவு 10.00 மணி வரை இந்த 2024 ஆம் ஆண்டுக்கான மடாணி அரசின் சாதனைகள் விழா கோலசிலாங்கூர் விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெறுகிறது. நாளைக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகக் கலந்து கொள்ள வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :