MEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

தமிழை படித்ததால் ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கிறேன்! பாப்பாராய்டு பெருமிதம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2-  தெலுக் இந்தான் சிதம்பரம் தமிழ்ப் பள்ளியில் படித்ததால் இன்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கிறேன் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராய்டு பெருமையுடன் குறிப்பிட்டார்.

தமிழ்ப் பள்ளியில் படித்ததை எண்ணி நான் பெருமை படுகிறேன். என் சகோதரர் கணபதி ராவ் அவர்களும் தமிழ்ப் பள்ளியில் படித்தவர்.  நானும் எனது அண்ணனும் ஆட்சிக் குழு உறுப்பினராக வருவோம் என்று என் தந்தை கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

தமிழ் யாரையும் கைவிடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும் என்று அவர் சொன்னார். என் பிள்ளைகளும் தமிழ்ப் பள்ளிகளில் படித்தவர்கள். தமிழ்ப் பள்ளியில் படித்தவர்கள் இன்று எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். மொழி அழிந்தால் அந்த இனம் அழிந்து விடும். பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அங்கு தமிழ்ப் பள்ளிகள் இல்லை. ஆனால் மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளை தொடர்ந்து காப்பாற்ற வேண்டிய கடப்பாடு அனைத்து இந்தியர்களுக்கும் இருக்கிறது என்று அவர் சொன்னார். மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் தவதிரு பாலயோகி சுவாமிகளின் ஆசியோடு இன்று பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் இந்து கலைக்களஞ்சியத்தை தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கும் விழாவுக்கு தலைமை தாங்கியபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :