ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சரவாக்கில்  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 356 பேராக உயர்வு

கூச்சிங், மார்ச் 2 – சரவா மாநிலத்தில் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி  121 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சரவாக் மாநிலத்தின்  தென் பகுதிகளில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர் என்று  சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழுவின்  அறிக்கை கூறியது.

கூச்சிங்கில், 82 குடும்பங்களைச் சேர்ந்த 194 பேர் டேவான் ஆர்-பியாங் கம்போங் சினார் புடி பாருவில் உள்ள  தற்காலிக நிவாரண மையத்தில்  தங்கியுள்ளனர். அதே சமயம் 23 குடும்பங்களைச் சேர்ந்த  98 பேர் ஸ்டாபோக்கில் உள்ள நிவாரண மையத்தில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இதற்கிடையில், பாவ் பகுதியிலுள்ள 16 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் டேவான் கம்போங் செகாங்,  தற்காலிக முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

சரவாக்கின் தெற்கு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


Pengarang :