SELANGOR

நகரத்தில் கிராமப்புற சூழ்நிலையை உருவாக்கத் திட்டம்

ஷா ஆலம், மார்ச் 11: நகரத்தில் கிராமப்புற சூழ்நிலையை உருவாக்க, கெபூன் பண்டார்@சைபர்ஜெயாவில் நெல் நடவு திட்டத்தைச் சிப்பாங் நகராண்மை கழகம் செயல்படுத்தியது.

நிலமேம்பாட்டு  துறையால் தொடங்கப்பட்ட MR297 சிராஜ் வகை நெல் நடவு முன்னோடி திட்டம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி 450 சதுர அடி பரப்பளவில் தொடங்கியது என அதன் தலைவர் கூறினார்.

“இத்திட்டம் உணவுப் பாதுகாப்பின் சங்கிலியை உருவாக்கவும் மற்றும் தற்போதைய தலைமுறை நெல் வயல்களின் காட்சியைக் காணவும் மேற்கொள்ளப்பட்டது” என்று டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அரிசியின் தரம் மற்றும் விளைச்சலுக்கு உத்தரவாதம் அளிக்க நவீன மற்றும் ஒருங்கிணைந்த நீர்ப்பாசன முறையை மேம்படுத்துவதற்குக் கூடுதலாக நான்கு நெல் அடுக்குகளை சேர்க்க அவர் திட்டமிட்டுள்ளார்.

மார்ச் 5 ஆம் தேதி, அப்துட் ஹமீட் மற்றும் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த சுமார் 50 பணியாளர்கள் நெல் அறுவடைத் திட்டத்தில் பங்கேற்றனர்.

அறுவடை நிகழ்வு பாரம்பரியமாக அரிவாளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. மேலும், இத்திட்டத்தில் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் 400க்கும் மேற்பட்ட பழ மரங்கள் நடப்பட்டன.


Pengarang :