ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாடு முழுவதும் உள்ள பழைய  தீயணைப்பு நிலைய வசதிகள் மேம்படுத்தப்படும்

அலோர் காஜா, மார்ச் 23: மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) நாடு முழுவதும் உள்ள பழைய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய (BBP) வசதிகளை பராமரிப்பதற்கும்   மேம்படுத்துவதற்கும்  முன்னுரிமை அளிக்கும்.

JBPM துணை இயக்குநர் ஜெனரல் (அபிவிருத்தி) டத்தோ அகமட் இஸ்ராம் உஸ்மான், கடந்த ஆண்டு, சம்பந்தப்பட்ட நிலையங்களில் மேம்பாடுகளை செய்ய 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்ட நிதி அதன் உறுப்பினர்கள்  மக்களுக்கு  சேவையாற்ற  வசதியாக இருக்கும்   என்றார்.

“பணிநிமித்தம் வருகையின் போது, அன்றாட பயன்பாட்டிற்காக தேய்ந்துபோன கழிப்பறைகள் போன்ற பல வசதி குறை பாடுகளை கண்டதாகவும்   கூறினார்.

“அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முக்கிய தேவைக்கான ஒதுக்கீட்டிலிருந்து பிபிபி மஸ்ஜிட் தானா உட்பட நாடு முழுவதும் பல நிலையங்கள் சீரமைக்கப் படுகின்றன.  நேர்மறையான மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் செய்யப் பட்டுள்ளன,

இந்த முயற்சி தொடரும்” என்று அவர் அதிகாரப்பூர்வ பணி மேற்பார்வைக்கு பின் நடத்திய செய்தியாளர்  சந்திப்பில் கூறினார்.

நேற்றிரவு இங்கு நடந்த நோன்புப் பெருநாள் விழாவில் , கலந்து கொண்ட லெந்து மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுலைமான் எம்.டி அலி, ஜேபிபிஎம் மலாக்கா துணை இயக்குநர் ஆர் சைபுல் இஸ்வாண்டி ஆர் ஹாசன் மற்றும் ஜேபிபிஎம் பெண்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் (பெரிஸ்மா) நலப் பணியக தலைவர் டத்தின் பாத்தியா பாக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், விழாவில் அஹ்மத் இஸ்ராம் கூறுகையில், பணியின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களில் சிக்கிய  தீயணைப்பு  வீரர்களின்  விதவைகள் மற்றும் குடும்ப வாரிசுகள் அடங்கிய 16 பேருக்கு  தலா RM1,500  வீதம்  நன்கொடையாக மொத்தம் RM24,000  வழங்கப் பட்டது.

பெரிஸ்மா மற்றும் மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூரிலிருந்து பெறப்பட்ட இந்த தொகை மேற்கண்ட மாநிலங்களில் கடமையாற்றிய  உறுப்பினர்களின் குடும்பங்களின் வாரிசுகளுக்கான    தென் மண்டல நன்கொடைத் திட்டம் என்று அவர் கூறினார்.


Pengarang :