ECONOMYMEDIA STATEMENT

நோன்புப் பெருநாளின் போது அவசரத் தேவைக்கு நீர் விநியோகம்-  தயார் நிலையில் ஆயர் சிலாங்கூர்

ஷா ஆலம், ஏப் 9- நோன்புப் பெருநாளின் போது பொது மக்களுக்கு சீராக நீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்ய அவசரத் தேவைக்கான சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகத்தை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தயார் நிலையில் வைத்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட நீரின் அவசர விநியோகத்திற்காக இரு 40,000 கேலன் டாங்கர் லோரிகளும் 90 சிறிய டாங்கர் (1,200 கேலன்) லோரிகளும் தயார் நிலையில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

இது தவிர 400 மற்றும் 500 கேலன் கொள்ளளவு கொண்ட 424 நிலையான டாங்கிகளும் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட 23,562 போத்தல் நீரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ஆயர் சிலாங்கூர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய இடங்களில் இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறியது.

சபாக் பெர்ணம் மாவட்டத்தில் 15 நிலையான டாங்கிகள் மற்றும் ஐந்து டேங்கர் லோரிகளும் கோல சிலாங்கூரில் 51 டாங்கிகள் மற்றும் ஐந்து டேங்கர் லோரிகளும் கிள்ளானில் 33 டங்கிகள் மற்றும் 10 டேங்கர் லோரிகளும் பெட்டாலிங்கில் 60 டாங்கிகள் மற்றும் 10 டேங்கர் லோரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர கோல லங்காட் (51 டாங்கிகள் மற்றும் 5 டேங்கர் லோரிகள்), சிப்பாங் (28 டாங்கிகள் மற்றும ஐந்து டேங்கர் லோரிகள்), உலு லங்காட் (60 டாங்கிகள் மற்றும் 10 டேங்கர் லோரிகள்), கோம்பாக் (40 டாங்கிகள் மற்றும் 10 டேங்கர் லோரிகள்), உலு சிலாங்கூர் (16 டாங்கிகள் மற்றும் ஐந்து டேங்கர் லோரிகளும்) ஆகியவை நீர் விநியோகம் தயார் நிலையில் வைக்கப்பட்ட இதர மாவட்டங்களாகும்.

கோலாலம்பூரில் இரு ஜூம்போ டேங்கர் லோரிகளும் 25 டேங்கர் லோரிகளும் 70 டாங்கிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Pengarang :