ECONOMYMEDIA STATEMENT

ஜூன் 5 ஆம் தேதி தண்ணீர் விநியோகம், இடையூறை  சமாளிக்க தயாராக  அறிவுறுத்தப்படுகிறார்கள்

ஷா ஆலம், மே 24: பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ் டி என் பிஎச்டி (சிலாங்கூர் ஏர்) சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அதன்  நீரளிப்பு சேவையை மேம்படுத்த சில புதுப்பிப்பு பணிகளை அடுத்த ஜூன் 5 ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும்.

இரவு 7 மணிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் பராமரிப்பு மற்றும் சொத்துக்களை மாற்றும் செயல்முறை, பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைகளை ஏற்படுத்த உள்ளது.

ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல், முக்கிய விநியோக முறை நிலைப்படுத்தப்பட்ட பிறகு, பயனிட்டாளர்கள் நீர் விநியோகத்தை  பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நீர் டாங்கி லாரிகள் மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வண்ணம் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும்.

“வணிக வாடிக்கையாளர்களுக்கு, பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள எந்த ஆயர் சிலாங்கூர் வாடிக்கையாளர் சேவை கவுண்டரிலும் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகங்களை வாங்கலாம்.

“வணிக வாடிக்கையாளர்கள் ப்ரமர் எஸ்டேட் (உலு லங்காட்), தமான் கெமிலாங் டெங்கில் மற்றும் பெக்கான் சாலாக் (சிப்பாங்) மற்றும் தாமான் பந்திங் பாரு (கோலா லங்காட்) ஆகிய இடங்களில் திறக்கப் படும் நான்கு நீர் நிரப்பு நிலையங்களில் தங்களுக்குரிய தண்ணீர் டேங்கர்களை பயன்படுத்தலாம்,” என Facebook  வழி தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆயர்  சிலாங்கூர் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு போதுமான நீர் கையிருப்பை   கொண்டிருக்கவும் மற்றும் இடையூறு காலம் முழுவதும் தண்ணீரை கவனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்துகிறது.

பயனர்கள் Air Selangor பயன்பாடு, Facebook, Instagram மற்றும் X மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம் அல்லது 15300 மூலம் Air Selangor ஐத் தொடர்புகொள்ளலாம் அல்லது https://www.airselangor.com/ ஐப் பார்வையிடவும்.


Pengarang :