ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மலேசியாவில் 940 கோடி வெள்ளியை முதலீடு செய்கிறது கூகுள்

கோலாலம்பூர், மே 30- உலகின் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் மலேசியாவில் 200 கோடி அமெரிக்க டாலரை (940 கோடி வெள்ளி)  முதலீடு செய்யவுள்ளது. முதலாவது கூகுள் தரவு மையம் மற்றும் கிளவுட் எனப்படும் கூகுள் மேகக் கணினி மண்டலத்தை அமைப்பதும் அதில் அடங்கும்

மேகக் கணினி சேவைக்கு உள்நாட்டிலும் உலகளாவிய அளவிலும் அதிகரித்து வரும் தேவை மற்றும் மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கற்பித்தல் திட்டங்களுக்காக இந்த முதலீட்டை குகூள் செய்துள்ளது.

கூகுளின் முதலாவது மலேசிய தரவு மையம் மற்றும் கிளவுட் மண்டலம் அக்குழுமத்தின் மலேசியாவுக்கான மிகப்பெரிய முதலீடாகும்.  இதனை 13 ஆண்டுகளுக்கான இருப்பிடம் என்று கூகுள் பெருமையுடன் அழைக்கிறது என்ற அல்ஃபாபெட் இன்காப்ரேட்ட ட் நிறுவனத்தின் தலைவராகவும் முதலீட்டு அதிகாரியாகவும் இருக்கும் கூகுளின் தலைமை நிதி அதிகாரி ரூத் போரெட் கூறினார்.

மிக உயரிய இணைய பாதுகாப்புத் தரம் உள்பட மலேசியாவின்  ‘கிளாவுட் முதலாவது கொள்கை‘யை முன்னேக்கி கொண்டுச் செல்வதில் இந்த முதலீடு அந்நாட்டு அரசாங்கத்துடனான எங்களின் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய இந்த அறிவிப்பின் மூலம் மலேசியாவும் கூகுளும் இணைந்து புதுமைக்கு ஆதரவான சுற்றுச்சூழலை உருவாக்குவதிலும் இலக்கவியல் மாற்றத்திற்கான ஆற்றலை வளர்ப்பதிலும் கூட்டாகச் செயல்படுகின்றன என்று அவர் இன்று வெளிளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இந்த முதலீடு 320 கோடி அமெரிக்க டாலர் (1,504 கோடி வெள்ளி) மதிப்பிலான நேர்மறையான பொருளாதார தாக்கத்திற்கும் வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் 26,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கம் காண்பதற்கும் வழி வகுக்கும் என கூகுள் கூறியது.

இங்கு நிறுவப்படும் தரவும் மையம் மலேசியர்கள் உள்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தும் சேர்ச், மேப்ஸ், வேர்க்பேஸ் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற இயங்கு தளங்களுக்கு மேலும் ஆற்றலை வழங்கும் என்றும் அது குறிப்பிட்டது.


Pengarang :