ECONOMYSELANGOR

குனோங் ஹீத்தாம் மலையுச்சியில் வழிகாட்டி மயங்கி விழுந்து மரணம்

கோலாலம்பூர், ஜூன் 2- உலு லங்காட்டில் உள்ள குனோங் ஹீத்தாம் மலையுச்சியை அடைந்த போது மலையேறிகளின் வழிகாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

ஐம்பத்தேழு வயதான நோர்ஃபிஷால் அப்துல் அஜிஸ் என்ற அந்த வழிகாட்டி இறந்து விட்டதை சுகாதார அதிகாரிகள் நேற்று மாலை 5.50 மணியளவில் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை 11.48 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

பண்டார் துன் ஹூசேன் ஓன் தீயணைப்பு நிலைய வீரர்களுடன் அரச மலேசிய போலீஸ் படை, சுகாதார அமைச்சு மற்றும் பொது தற்காப்பு படை உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தாக அவர் சொன்னார்.

நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட மீட்புக் குழுவினர் அந்த மலையுச்சியை அடைவதற்கு நான்கு மணி நேரம் பிடித்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மீட்புக் குழுவினர் மாலை 4.30 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த போது நோர்ஃபிஷால் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். எனினும் அவருக்கு நாடித் துடிப்பு இருந்தது. மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவிச் சிகிச்சையை தொடக்கினர் என்று அவர் குறிப்பிட்டார்.

 பாதிக்கப்பட்ட நபரை மலையிலிருந்து இறக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்த மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாலை 5.50 மணியளவில் அவர்  மரணடைந்தார் என்றார் அவர்.

 


Pengarang :