ECONOMYPENDIDIKAN

384 கல்விக் கழகங்கள் முதன்மை நிலை மையங்களாக தரம் உயர்த்தப்படும்- கல்வியமைச்சர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 2- நாட்டிலுள்ள 384 கல்வி மையங்களை கல்வியமைச்சு டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய முதன்மை மையங்களாக (சி.ஒ.இ) மாற்றவுள்ளது.

இந்த தரம் உயர்த்தும் பணியானது டிஜிட்டல் ஸ்டுடியோ மற்றும் மேக்கர் மையங்களை அமைப்பதன் மூலம் ஆசிரியர்களின் திறனையும் போட்டியிடும் ஆற்றலையும் மேம்படுத்துவதை நோக்கமா க்  கொண்டுள்ளது 

இந்த நோக்கத்தின் அடிப்படையில் 384 இடங்களில் ஆசிரியர் நடவடிக்கை மையங்களை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்று கல்வியமைச்சர் ஃபட்டிலான சீடேக் தெரிவித்தார்

இந்த முதன்மை நிலை கல்வி மையங்கள் இலக்கவியல் உபகரணங்களைக் கொண்டிருக்கும். ஆசிரியர்களை இலக்காகக் கொண்ட இத்தகைய மையங்கள் அவர்களின் ஆற்றலை மேம்படுத்தி அதன் வாயிலாக மாணவர்களின் திறனையும் மேம்படுத்துவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்று அவர்  கூறினார்.

நேற்று இங்குள்ள தேசிய அறிவியல் மையத்தில் நடைபெற்ற 2023 தேசிய நிலையிலான இலக்கவியல் பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப விருதளிப்பு  நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் துணைக் கல்வியமைச்சர் வோங் கா வூ மற்றும் மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகத்தின் தலைவர் சைட் இப்ராஹிம் நோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட கட்டொழுங்கு தொடர்பான விவகாரங்களில் அதிகாரத் துஷ்பிரயோகம் நிகழ்வதை அமைச்சு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் ஃபாட்டிலினா சொன்னார்.

மாணவர்கள் நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஒருபோதும் சமரசப் போக்கு கடைபிடிக்கப்படாது என்பதை வலியுறுத்தி நாம் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :