ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பொதுச் சேவை ஆணையத்தின் தலைவராக ஜைலானி யூசுப் நியமனம்

புத்ராஜெயா, ஜூன் 7 –  பொது சேவை ஆணையத்தின் தலைவராக டத்தோஸ்ரீ அகமது ஜைலானி யூனுஸ் இன்று தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 139(4) பிரிவின்படி மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜைலானிக்கு  பொது சேவைத் துறையில் 30 ஆண்டு கால அனுபவம் இருப்பதாக அவர் கூறினார்.

பொதுச் சேவைத் துறையின் பொதுச் சேவைகள் பிரிவு  (நடவடிக்கை) துணைத் தலைமை  இயக்குநர்  மற்றும் புறநகர் மேம்பாட்டு அமைச்சின் பொதுச் செயலாளர் உட்பட பொதுச் சேவையில் பல்வேறு முக்கிய பதவிகளை ஜைய்லானி வகித்துள்ளார்.

மேலும்,  ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் நிலவடிவமைப்பு சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் துறையில்  அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.


Pengarang :