ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 159 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை: டத்தோ ரமணன் வழங்கினார்

சுங்கை பூலோ, ஜூலை 14- சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோ ஆர். ரமணன் தலைமையில் எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 159 மாணவர்களுக்கு கிட்டத்தட்ட  72,350 வெள்ளி  ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை அமைச்சு, பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் ஒத்துழைப்புடன் எஸ்பிஎம் தேர்வில் 7ஏக்குப் மேல் எடுத்த  மாணவர்களுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

சவால்மிகுந்த காலகட்டத்தில் நமது மாணவர்கள் பயணிக்கின்றனர். இன்றைய  இணைய உலகத்தில் கற்றல் கற்பித்தலில் சிறந்து விளங்குவதில் சாதாரணமாக ஒன்றல்ல. மிகவும் கவனமாக இருந்து, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த மாணவர்கள் மட்டுமே வெற்றித் திலகமிட்டுக் கொள்கின்றனர். ஊக்கத் தொகை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இவ்வேளையில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ரமணன் தமதுரையில் தெரிவித்தார்.

வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. அப்படி கல்வியில் சாதிக்கும் ஊக்குவிப்புகள் அதை விட முக்கியமானதாக விளங்குகிறது.  அதன் அடிப்படையில்தான் மாணவர்களுக்கு இந்த ஊக்குவிப்பு தொகைகள் வழங்கப்பட்டது. இத்தொகை நிச்சயம் அம்மாணவர்களுக்கு நிச்சயம் பயன் தரும் என நான் நம்புகிறேன்.

குறிப்பாக, இதுபோன்ற முயற்சிக்கு ஆதரவளித்த பேங்க் ரக்யாட் அறவாரியத்திற்கு தனது நன்றியை   தெரிவித்தார். இதுபோன்று மற்ற ஏஜென்சிகளும் மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் வாரியக் குழு உறுப்பினர் டத்தோ ஹாஜி ஷம்ரி சாலே, தலைமை நிர்வாகி சைபுல் ரிஷால், துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Pengarang :