MEDIA STATEMENTSELANGOR

நூர் ஃபாரா கார்தினியின் கொலை விசாரணையில்  திருப்தி கொள்வதாக குடும்பத்தினர் கருத்து

உலு சிலாங்கூர், ஜூலை 27: ஜூலை 15 ஆம் தேதி செம்பனை தோட்டத்தில் இறந்து கிடந்த நூர் ஃபாரா கார்தினியின் குடும்பத்தினர், இதுவரை நடைபெற்ற விசாரணையில்  திருப்தி அடைந்துள்ளனர்.

இறந்தவருக்கு நீதி கிடைக்கும் என்று குடும்பத்தினர் நம்புவதாகக் நூர் ஃபாரா கார்தினியின் உறவினர் சுஸுர்சோஃபியா ஸ்மெட் ஜெயா (33) கூறினார்.

“இதுவரை வழக்கு விசாரணை நேர்மையாக சென்றுகொண்டிருக்கிறது. இதற்குப் பிறகு வழக்கு மீண்டும் குறிப்பிடப்படும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். இறந்தவருக்கான நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் இன்று கோலா குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.

நூர் ஃபரா கார்தினியைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள லான்ஸ் கார்ப்ரல் முகமது அலிஃப் மோன்ஜானியின் (வயது 26) வழக்கைப் பற்றி அறிந்து கொள்ள நூர் ஃபாரா குடும்பத்தைச் சேர்ந்த மற்ற இரு உறுப்பினர்களுடன் சுஸுர்சோஃபியா ஆஜரானார்.

நீதிமன்ற விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை, உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர்.


Pengarang :