ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

கோல லங்காட் கடல் பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மீன்பிடி கருவிகள் பறிமுதல்

ஷாஆலம், ஜூலை 28  – இம்மாதம் 25ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட  ஒருங்கிணைந்த ஓப் ஹரிக்கேன்     நடவடிக்கையில் கோல லங்காட் கடல் பகுதியில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த  மீன்பிடி சாதனங்களை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு பறிமுதல் செய்தது.

1985ஆம் ஆண்டு  மீன்பிடிச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள   சட்டத் திட்டங்களையும் லைசென்ஸ் தொடர்பான விஷயங்களையும்  மீனவர்கள் அறிந்திருப்பதை உறுதி செய்யும் நோக்கிலான இந்த சோதனை நடவடிக்கையை மீன்வளத் துறையுடன் இணைந்து தாங்கள் மேற்கொண்டதாக அத்துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் கேப்டன் அப்துல் முஹைமின் அப்துல் சாலே கூறினார்.

நாட்டில் மீன்வளம் நீடித்திருப்பதையும் அத் தொழில்துறை
முறையாகப் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய இத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்த பறிமுதல் தொடர்பில் 1985ஆம் ஆண்டு மீன்படிச் சட்டத்தின் 11(3)(பி) மற்றும் 11(3)(சி) ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :