MEDIA STATEMENTSELANGOR

பாடாங் ஜாவாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு காரணம் ஆராயப்படுகிறது

ஷா ஆலம், ஆகஸ்ட் 22: பாடாங் ஜாவாவில்  நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கான காரணத்தை பத்து தீகா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆராய்ந்து வருகிறார். இது நீர்த்தேக்கம் செயல்படாததால் வெள்ளம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

ரிம5.3 மில்லியன் செலவில்  இந்த  நீர்த்தேக்கம் கடந்த ஆண்டு அக்டோபரில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்று டேனியல் அல் ரஷீட் ஹரோன் கூறினார்.

நீர்தேக்கத்திற்கு தண்ணீர் செல்லவில்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன், அதைத் தொடர்ந்து சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண பல்வேறு நிறுவனங்களுடன் நேற்று காலை சந்திப்பு நடைபெற்றது.

திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் நர்சரிகள் சம்பந்தப்பட்ட துப்புரவு பணியில் தனது தரப்பு கவனம் செலுத்தும் என்று டேனியல் கூறினார்.

இதற்கிடையில், சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப் பட்டவுடன் தனது தரப்பு விரைவு நடவடிக்கை குழுவை (ரேபிட்) அந்த இடத்திற்கு அனுப்பியதாக டத்தோ பண்டார் ஷா ஆலம் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் தெரிவித்தார்.

துப்புரவு பணிக்கு விரைவுப் படை களமிறங்கியுள்ளது. மேலும், வெள்ளத்திற்கான காரணத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். வடிகால் அமைப்பை சரிசெய்ய வேண்டுமா அல்லது குப்பை உள்ளிட்ட பிற காரணிகள் உள்ளதா என்பது  குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

கனமழையால் ஷா ஆலம் மற்றும் கிள்ளானை சுற்றியுள்ள ஜாலான் கெபுன், செத்தியா ஆலம், சுங்கை பெர்தே மற்றும் போர்ட் கிள்ளான் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :