SELANGOR

iMotorbike உடன் கூட்டு முயற்சியில் சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் (STDC) ஈடுப்பட்டுள்ளது

ஷா ஆலம், மார்ச் 15: மாநில இளைஞர்களின் கல்வி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனமான iMotorbike உடன் கூட்டு முயற்சியில் சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் (STDC) ஈடுப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பு சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையத்தின் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு மோட்டார் துறையில் வேலை கிடைப்பதுடன் தொழில்துறை பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“iMotorbike உடனான ஒத்துழைப்பு STDC தொழில்துறை மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான மாநில அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும். இது சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

அதற்கு முன், இன்று STDC தலைவர் நஸ்ரி நோ மற்றும் iMotorbike தலைமை செயல் அதிகாரி கில் கார்மோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அவர் நேரில் கண்டார். அச்சமயம் பெர்மோடாலன் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (PNSB) இன் தலைமைச் செயல் அதிகாரி ராஜா அகமட் ஷாரிர் இஸ்கண்டாரும் உடன் இருந்தார்.

பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் வணிகத்தை நடத்தும் iMotorbike, RM2 மில்லியன் மதிப்புள்ள PNSB இன் மிகப்பெரிய முதலீட்டைப் பெற்ற முதல் தொடக்க நிறுவனம் என்று அமிருடின் தெரிவித்தார்.

அதே நிகழ்வில், iMotorbike சிலாங்கூர் மக்களுக்கு 250ccக்கு குறைவான மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கு RM100 மற்றும் 250cc மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு RM200 தள்ளுபடியை அறிவித்தது.


Pengarang :