MEDIA STATEMENT

505 மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு

மக்களின் தீர்ப்பு! நான்கு  ஆண்டுகளுக்கு முன் மே 5 நம்மில் பலர் மறந்திருக்கலாம். மக்கள் கூட்டணி 13வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு கடுமையான போட்டியை நடத்தியது சரித்திரமாகும். நஜிப் தொடர்ந்து பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழக்கச் செய்தது மட்டுமில்லாமல் முதல் தடவையாக பெரும்பான்மை வாக்குகளும் மக்கள் கூட்டணிக்கு கிடைத்தது. 52% மக்களின் வாக்குகள் மக்கள் கூட்டணிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தேசிய முன்னணி இன்றும் ஆட்சியில்  இருப்பது தேர்தல் எல்லை மறுசீரமைப்பு தான் என்றால் மிகையாகாது.

சிலாங்கூர், கிளாந்தான் மற்றும் பினாங்கு தொடர்ந்து மக்கள் கூட்டணியிடம்  அதிகமான வெற்றிகளை கொடுத்து  மாநில அரசாங்கங்களை வலுவாக செய்தது. திரெங்கானு மாநிலம் 2 சட்ட மன்றங்கள் வித்யாசத்தில் தேசிய முன்னணி சிறிய அளவில் வெற்றி பெற்றது. அம்னோ பிஎன் அரசாங்கத்தின் கோட்டையான ஜோகூர் மாநிலம் 12 சட்ட மன்றங்களில்  எதிர்க்கட்சிகள் ஊடுருவியது. உண்மையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் 14வது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றி விடலாம்  என்பதில் ஐயமில்லை. பல வெற்றிகள் அடைந்தும் மக்கள் கூட்டணிக்கு கெடாவில் பலத்த  அடி விழுந்தது. பேராக் மாநிலத்தை கைப்பற்றும் எண்ணமும் ஈடேறவில்லை.

அதைவிட பெரிய சம்பவம் ஓர்  ஆண்டுக்கு பின் நடைபெற்றது. ஆம் ஜசெகவின் சிங்கம் கர்பால் சிங்  அகால மரணமடைந்தார்.  கெஅடிலான் மற்றும் மறுமலர்ச்சி தந்தை  அன்வர் இப்ராஹிம் சூழ்ச்சிக்காரர்களால் சிறைவாசம் அடைந்தார். தொடர்ந்து பாஸ்கட்சி யின் ஆன்மீக தலைவர் தோக் குரு நிக் அப்துல் அஸிஸ் இறைவனடி சேர்ந்தார். இந்த பேரிழப்புகள் நம்மிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. நஜிப் தொடர்ந்து 1MDB போன்ற பல  ஊழல்கள் செய்தாலும், இதனால்  அம்னோவில் பெரிய அளவில்  எதிர்ப்புகள் கிளம்பினாலும், தற்போது  எதிர்  அணியிலும் பிளவுபட்டதான் இருக்கிறோம்.

சாராங் செமுட்டில் நடந்த பாஸ் கட்சி யின் மாநாட்டின் தீர்மானங்களை வைத்து பல்வேறு செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.  அதுவும் ஓட்ஸ்ஏப் யுகத்தில் சிலாங்கூர் மாநில நிர்வாகத்தை பற்றி பேசப்பட்டது.  சிலர் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ள  இருக்கிறார்கள் என்றும் செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அரபு நாடுகளில் இருந்து நாடு திரும்பியதும் அவருடன் பாஸ் கட்சியை சேர்ந்த ஆட்சிக் குழு உறுப்பினர்களும் கெஅடிலான், பாஸ், ஜசெக மற்றும்  அமானா கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வந்தது சிலாங்கூர் மாநிலத்தில் நிலையான ஆட்சி இருக்க வேண்டும்  என்று உறுதியாக தெரிகிறது.

 

505-வின் வெற்றி முழக்கம் அனைத்து தீயசக்திகளையும் உடைத்தெறிவோம் என்று வீர கர்ஜணை செய்திட வேண்டும். மக்களின் 505 தீர்ப்பு மகேசனின் தீர்ப்பாக இருக்க வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டு தேசிய முன்னணியை தவிர்த்து அனைத்து  எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

* அமிருடின் ஷாரி

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்

 

தமிழாக்கம் 

கு.குணசேகரன்


Pengarang :