PBTSELANGOR

பிஜே கித்தா கற்றல் திட்டம் அமலாக்க ரிம5 மில்லியன் ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, மே 6:

கடந்த ஆண்டில் இருந்து       பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் ரிம5 மில்லியன் ஒதுக்கீடு செய்து 21-ஆம் நூற்றாண்டு கல்வி திட்டத்தை மேம்படுத்த ‘பிஜே கித்தா’ எனும் தலைப்பில் #பிஜேஸ்கூல் வழி திட்டமிட்டு இருக்கிறது.

எம்பிபிஜே-வின் மேயர், டத்தோ முகமட்  அஸிஸி முகமட் ஜைன் கூறுகையில், நிதி ஒதுக்கீடு பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பொது வசதிகள் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மேம்படுத்த பயன்படுத்தப்படும்.

இதுவரை  இத்திட்டத்தில் தேசிய பள்ளிகளான தாமான் மேடான், லெம்பா சுபாங், டமன்சாரா டாமாய், சுல்தான்  அலாம் ஷா 1&2, ஸ்ரீ பெட்டாலிங், ஸ்ரீ டாமாய், அசுந்தா, ஸ்ரீ அமான் மற்றும் சமயப் பள்ளிகளான கம்போங் மேடான் மற்றும் பினாங் துங்கால் ஆகியவை  அடங்கும்.

”   #பிஜேஸ்கூல் எனும் கருப்பொருளில் எம்பிபிஜே  எல்லா பள்ளிகளுடன்  ஒன்றிணைந்து பாதுகாப்பான சூழ்நிலை, மகிழ்ச்சி மற்றும் நிலையான சுற்று சூழலை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் எம்பிபிஜே  அண்மையில் ஸ்ரீ அமான் (பெண்கள்) இடைநிலைப் பள்ளியில் ‘சையில்ஸ்’ எனும்  அனைத்துலக ரீதியில் 110 பங்கேற்பாளர்கள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து கலந்து கொண்ட போட்டி வெற்றி பெற முழுமையான  ஆதரவை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது,” என்று கூறினார்.


Pengarang :