NATIONAL

லஞ்சத்தை தீவிரமாக தடுக்க, ஊழல் தடுப்பு ஆணையம் ‘கெரா’-வை தொடங்கியது

ஷா ஆலம், மே 8:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) இன்று லஞ்ச எதிர்ப்பு புரட்சி இயக்கத்தை (கெரா) லஞ்ச ஊழலை முற்றாக ஒழிக்க தொடங்கி உள்ளது. தலைமை ஆணையர், டத்தோ ஸுல்கிப்லி அமாட் விவரிக்கையில், ‘கெரா’ ஆணையத்தின்  உறுதிப்பாட்டை உணர்த்தும் சின்னம் எனவும் தனது நடவடிக்கைகளில் எந்த ஒரு சஞ்ஜலமும் இல்லாமல் லஞ்ச ஒழிப்பில் தீவிரமாக செயல் பட அமையும் என்று கூறினார்.

மேலும் கூறுகையில், இந்த இயக்கம் மக்களை அணுகவும் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும், அடுத்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோரை நடுங்க வைக்கவும் செய்யும் என தெரிவித்துள்ளார்.

Datuk Dzulkifli Ahmad SPRM

 

 

 

 

 

 

”  ‘கெரா’-வின் கீழ் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் மட்டும்  நடவடிக்கைகளில் பங்கு வகிக்க மாட்டார்கள். மாறாக, அனைத்து பொது மக்களும் ‘கெரா’ போராட்டவாதிகளாக  இருக்கலாம்,” என்று கூறினார்.

இன்று காலை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக ‘கெரா”வை தொடக்கி வைத்தார். சுமார் 2000 ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் நாடு தழுவிய அளவில் களம் இறங்கி மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த முனைவார்கள்.

GERAH merupakan hasil cetusan idea Dzulkifli dan selari dengan slogan “SPRM Mesra Rakyat, Digeruni Perasuah”.


Pengarang :