SELANGOR

நீதிபதி 1எம்டிபி வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டார்

ஷா ஆலம், மே 16:

கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி, டத்தின் அஸிஸா நவாவி சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தொடுத்த 1எம்டிபி தணிக்கை அறிக்கையை அரசாங்க ரகசிய சட்டத்தில்  (ஓஎஸ்ஏ) கீழ் வகைப்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படும் வழக்கில் இருந்து விடுவித்து கொண்டார். வழக்கின் நிர்வாகத்தில் இன்று நீதிபதி அஸிஸா முன் ஆஜர் ஆகும் பொது தெரிவித்தார். அவர் இதற்கு முன்பு இவ்வழக்கில் நீதிபதியான ஷா ஆலம் மாறிச் சென்ற டத்தோ ஹனிபா பாஃரிக்குல்லாவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்மினின் வழக்கறிஞர், கணேசன் நித்தி கூறுகையில் நீதிபதி அஸிஸா தனது கணவர் டத்தோ நிக் சுஹாய்மி நிக் சுலைமான் சிலாங்கூர் மாநில சட்ட ஆலோசகராக செயல்பட்டு வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார் என்று கூறினார்.

” ஆக நீதிமன்றம் எதிர் வரும் மே 23 வழக்கின் நிர்வாகத்தை பதிவதிகாரி முன் வைத்து வழக்கை செவிமடுக்க நீதிபதியை தேர்வு செய்யப்படும்,” என்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

முகமட் அஸ்மின் அலி நீதிமன்ற ஆய்வை விண்ணப்பம் தாக்கல் செய்திருப்பதும் அதில் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், தேசிய தணிக்கை இலாகாவின் தலைவர் டான்ஸ்ரீ அம்ரின் புவாங் மற்றும் அரசாங்கத்தையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார். தணிக்கை அறிக்கையை அரசாங்க ரகசிய சட்டத்தின் கீழ் வைப்பது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று பிரகடனம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :