NATIONAL

நிக் நஸ்மி: ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை உண்டு

ஷா ஆலம், மே 16:

ஆசிரியர்கள் நாட்டின் மேம்பாட்டுக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்றும் அவர்கள் அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சிக்கும் உரிமை உண்டு என்று கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார். ஆசிரியர்கள், மக்கள் நலனை புறக்கணிக்கும் அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் உரிமை உண்டு என்று விவரித்தார்.

நிக் ரஷ்மி மேலும் கூறுகையில், ஆசிரியர்கள் பரந்த பொது அறிவு, உயர்ந்த திறன் மற்றும் போற்றப்படும் ஆளுமை போன்ற சிறப்புகள் அவர்களை மதிக்கப்படும் மனிதர்களாக பார்க்கும் படி இருக்கிறது என்று தெரிவித்தார். மலேசியா இன்று லஞ்ச ஊழல், பதவி துஷ்பிரயோகம் மற்றும் கல்விக்கான ஒதுக்கீடு குறைக்கப் பட்டுள்ள சூழ்நிலை போன்ற சிக்கல்களை எதிர் நோக்கி இருக்கிறது. 2010-இல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கிரேட் டிஜி41 மற்றும் டிஜி48 நிலையில் உள்ளவர்கள் அரசியலில் ஈடுபட முடியும் என்று ஆணை பிறப்பித்தார்கள் தானே? என்று விவரித்தார்.


Pengarang :