MEDIA STATEMENT

சீனி விலையேற்றம் வேண்டாம், மாறாக தனிநிறுவன ஆதிக்கத்தை நீக்குக

எம்எஸ்எம் மலேசியா ஹோல்டிங்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவர் மற்றும் பெஃல்டா குலோபல் வென்ட்ச்ர் ஹோல்டிங்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான   டத்தோ ஸாக்காரியா அர்ஷாட் வெளியிட்ட செய்தியில் சீனி விலையை கிலோவுக்கு 40 சென் ஏற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

கடந்த மார்ச் 1, உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு சங்கம் மற்றும் பயனீட்டாளர் அமைச்சு சீனி விலையை ரிம 2.84 இருந்து 11 சென் உயர்ந்து ரிம 2.95 ஆக விலையேற்றம் கண்டது. விலை உயர்வு கண்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் மீண்டும் 29 சென் நோன்பு மாதம் மற்றும் நோன்பு பெருநாள் முன்னிட்டு சீனி விலையை ஏற்ற நினைப்பது நியாயமான செயலே அல்ல என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது.

கடந்த அக்டோபர் 2013-இல் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் சீனியின் அரசாங்க உதவியை நிறுத்தியது. இதனால் சீனியின் மொத்த விலை ஒரு டன் ரிம 2,680 ஆக உயர்வு கண்டது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் எம்எஸ்எம் நிறுவனம் அதன் மற்ற உற்பத்திகளான காஸ்டர், ஐசிங் மற்றும் கருப்புச் சீனி போன்ற பொருட்களின் விலையை 30% ஏற்றியது. நாட்டின் சீனி விலை இப்படி இருக்க, உலக மூல சீனியின் விலை  US $0.22 குறைந்து விட்டது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விலைகள் குறைந்த வண்ணம் உள்ள நிலையில் மக்களின் சுமைகளை மேலும் ஏற்ற சீனி விலையேற்றம் எதற்கு?

இன்றைய அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் மக்களிடம் இருந்து ஜிஎஸ்டி வரியை வசூல் செய்து வருவதும், அதனால் மக்களின் செலவீனங்கள் அதிகரித்து வருகிறது என்று அனைவரும் தெரிந்த ஒன்றுதான். ஆகவே நஜிப் தலைமை ஏற்று நடத்தும் அரசாங்கம் மக்கள் விலையேற்றத்தால் சிரமப்படுவதை காண விரும்புகிறதா?

ஆக, அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் சீனி விலை உயர்வு கோரிக்கையை ஒரு புறம் இருக்க, ஒரு தனிப்பட்ட நிறுவனம் மட்டுமே சீனி உற்பத்தி செய்யும் நடைமுறையை நீக்க வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலம் ஒரு சில தனி மனிதர்கள் கோடிக் கணக்கான வருமானத்தை ஈட்டிவருவது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் சீனி வணிகத்தில் நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். இதனால் உள்நாட்டு சீனி விலை சந்தையில் முடிவு செய்யப்படும். விலை போட்டா போட்டியினால் பயனீட்டாளர்களுக்கு அதிக நன்மை அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

இந்த வேளையில், அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் தனிநிறுவன ஆதிக்கத்தை நீக்க வேண்டும். பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்கள் ஆகவும் பாமர மக்கள் தொடர்ந்து ஏழைகளாக இருந்து சிரமங்களை எதிர்நோக்கி வருவது புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

* கூய் ஹிசியாவ் லியோங்

அலோர் ஸ்தார் நாடாளுமன்ற உறுப்பினர்

கெஅடிலான் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் 


Pengarang :