SELANGOR

சிலாங்கூர் காவல்துறை போலி நாணய கும்பலை முறியடித்தது

ஷா ஆலம், மே 24:

சிலாங்கூர் காவல்துறை ஆறு சந்தேக நபர்களை நேற்று வெவ்வேறு இடங்களில் கிள்ளான் பள்ளத்தாக்கில் கைது செய்து போலி நாணய கும்பலை முறியடித்தது. சிலாங்கூரின் வணிக குற்றவியல் விசாரணை இலாகாவின் தலைவர் துணை ஆணையர் வான் ருக்மான் வான் ஹாசான் கூறுகையில் இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் பண்டார் புக்கிட் திங்கியில் மலிவு விலை தங்கும் விடுதியில் கைது செய்ததாக பிஎச் ஓன்லைனில் தெரிவித்தார்.

இதனிடையே கைது செய்யப் பட்ட சந்தேக நபர்கள் கடந்த ஆண்டில் இருந்து போலி நாணய மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறினார்.

”   கைது நடவடிக்கையில் காவல்துறை ரிம 5000 போலி நாணயங்கள் மற்றும் போலி நாணய அச்சடிக்கும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தது. மேற்பட்டவர்களிடம் விசாரணையின் வழி இரண்டாவது கைது நடவடிக்கை ஜாலான் கெபுனில் ஒரு ஆடவரிடம் 50 ரிம 100 கள்ள நோட்டுகள், இரண்டு ரிம 20 கள்ள நோட்டுகள் மற்றும் போலி நாணய அச்சடிக்கும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்யப்பட்டது,” என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வான் ருக்மான் மேலும் கூறுகையில், போலி நாணய கும்பலின் தலைவனை பூச்சோங்கில் கைது செய்ததாக பிஎச் ஓன்லைனில் தெரிவித்தார். அந்த ஆடவரிடம் 20 ரிம 100 கள்ள நோட்டுகள் மற்றும் போலி நாணய அச்சடிக்கும் இயந்திரத்தையும் கைப்பற்றினார்கள் என்று விவரித்தார்.

இதனிடையே இந்த குற்றம், செக்சன் 489D தண்டனைக் குறிய சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று கூறினார்.


Pengarang :