ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல குபு தேர்தல்- பொது மக்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக  எஸ்.பி.ஆர்.எம். நடவடிக்கை அறை

உலு சிலாங்கூர், ஏப்ரல் 27: கோல குபு பாரு  இடைத்தேர்தலில்  ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று நடவடிக்கை அறையை தொடங்கியுள்ளது.

ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில எம்ஏசிசி அலுவலகத்தில் அமைந்துள்ள அந்த  நடவடிக்கை அறை இன்று தொடங்கி வரும்  மே 11 ஆம் தேதி வரை வரை 24 மணிநேரமும் செயல்படும் என்று எம்ஏசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த புகார்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் அல்லது 03-5528318 அல்லது 03-55256500 என்ற எண்ணில் அழைக்கலாம்  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையச்  மற்றும் 1954 ஆம் ஆண்டு  தேர்தல் குற்றச் சட்டம்  ஆகியவற்றின் படி தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எம்.ஏ.சி.சி. நினைவூட்டியது.


Pengarang :