RENCANA PILIHANSELANGOR

‘ஜோம் சொப்பிங்’ தொடர்ந்து மக்களிடையே பிரபலம்

கிள்ளான், மே 29:

‘ஜோம் சொப்பிங்’ சிலாங்கூர் மக்களிடையே பிரபலம் அடைந்து பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் (ஐபிஆர்) மூலம் இலக்கை நோக்கி வருகிறது என்று மாநில வாணிபம், சிறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். மாநில அரசாங்கம் ரிம 100 பெறுமானமுள்ள கூப்பன் மூலம் வீட்டுக்கு தேவையான பொருட்களை தகுதியான மக்கள் நேரடியாக வாங்கும் திட்டத்தின் அணுகுமுறையில் மனநிறைவு அடைவதாக கூறினார்.

”   இது வரையில் இந்த திட்டம் பிரபலமாகி வருகிறது, மக்களின் சுமைகளை குறைக்க உதவுகிறது. நாம் இந்த திட்டத்தை தொடர்ந்து நடத்தி மக்களுக்கு பணியாற்றுவோம் குறிப்பாக பெருநாள் காலங்களில் எல்லா இனத்தவர்களுக்கும் உதவிகள் கிடைக்கும்,” என்று கிள்ளான் பரேட், எகோன்சேவ் பேரங்காடியில் நடந்த சுங்கை பினாங் சட்ட மன்றத்தின் ஜோம் சோப்பிங் நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். மொத்தம் 500 தகுதியான மக்கள் கூப்பன்கள் பெற்றுக் கொண்டனர்.

unknown

 

 

 

 

 

 

கூப்பன் முறையில் ரிம 100 இருந்து ரிம 200 ஆக தொகையை உயர்ந்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதில் அளிக்கும்போது மாநில அரசாங்கத்தின் நிதிநிலை கருத்தில் கொண்டு செயல்படும் என்று விவரித்தார். மேலும் மாநில அரசாங்கம் சமூக நல திட்டங்கள் மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் பல்வேறு ஐபிஆர் திட்டங்களின் மூலம் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றி வரும் என்றார்.

 


Pengarang :