MEDIA STATEMENT

தொடர்பு கருவிகள் பழுது, நாட்டின் தற்காப்பு பலவீனத்தை மறைக்கவா?

கெடி பெர்டானா மற்றும் அதன் 9 மாலுமிகள் 51 மணி நேரம் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் செடிலி கடலோரப் பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் அனைவரும் கண்டுபிடிக்கப் பட்டதை நினைத்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மலேசிய அரச கடற்படையின் தளபதி, லக்சமனா டான்ஸ்ரீ அமாட் கமாரூஸாமான் அமாட் படாரூடின் சம்பவத்தை விளக்கம் அளிக்கையில் கெடி பெர்டானா காணாமல் போனதிற்கான காரணம் தொலை தொடர்பு கருவிகள் பழுது மற்றும் எண்ணெய் முடிந்து விட்டது என்று விவரித்தார்.

எப்படி கப்பலில் முக்கியத்துவம் வாய்ந்த தொலை தொடர்பு கருவிகள் பயன்படுத்த முடியாமல் போனது? ஏன் இந்த சூழ்நிலை ஏற்பட்டது? இவ்வளவு நாட்களாக முறையாக பரிசோதனைகள் கப்பலில் நடத்தப் படவில்லையா? இந்த விடயத்தில் அரசாங்கம் மிக எளிதாக எண்ணி விட வேண்டாம் ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.

மலேசிய ஆயுதப்படைக்கு அரசாங்கம் அதிநவீன மற்றும் தரமான கருவிகள் கொடுக்கப்படவேண்டும். இதன் மூலம் ஆயுதப்படை நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் சிறந்த முறையில் பணியாற்ற முடியும். ஆனால் தற்காப்பு கருவிகள் பழங்காலத்தில் உள்ளதாக இருக்கிறது. நஜிப் மற்றும் ரோஸ்மா பயன்படுத்தி வரும் விமானத்தை மாற்றும் போது ஏன் ஆயுதப்படையின் தற்காப்பு கருவிகளை மாற்ற முடியாது?

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் அரசாங்கம் நாட்டின் தற்காப்பு பலவீனத்தை மறைக்க முயற்சி செய்வது ஏன்? நான் சம்பந்தப்பட்ட மேல்மட்ட தலைவர்களை கேட்டுக் கொள்வது, தகுந்த முறையில் விசாரணை நடத்தப் பட வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதன் மூலம் எதிர் காலத்தில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

* முகமட் இம்ரான்

லூமுட் நாடாளுமன்ற உறுப்பினர்

பேராக் மாநில கெஅடிலான் உதவித் தலைவர்


Pengarang :